பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பன்னிரு திருமுறை வரலாறு


திருநாவுக்கரையனுக்கும்” எனவும் வரும் கல்வெட்டுத் தொடர்கள், வழிபாட்டிற்கும் தெய்வபாடல்களுக்கு முள்ள நெருங்கிய தொடர்பை நன் கு புலப்படுத்தல் காணலாம். மேற்குறித்த கல்வெட்டுத் தொடரொன் றில் திருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் என வழி பாடு நிகழுமிடத்தைக் குறித்தபின் மீண்டும் தேவாரத் துக்கு எனச் சுட்டியதன் கருத்து ஈண்டு நோக்கத்தக்க தாகும். இத்தொடரில் வந்துள்ள தேவாரமென்னுஞ் சொல் கடவுள் வழிபாட்டிற்கு இன்றியமையாத தெய்வப்பாடல் பாடுதலாகிய இசைத் தொண்டினேச் சிறப்பாகக் குறித்து நிற்றல் காணலாம். முதல் இராசேந்திரனது ஆட்சி காலத்தில் நாங்கூருடையான் பதஞ்சலிப்பிடாரன் என்பான் தேவார நாயகம் என அழைக்கப்படும் சிறப்பினேப் பெற்ருன் என் அறிகின் ருேம். பிடாரன் என்னும் சொல், இசை பாடுபவனேக் குறித்து வழங்கும் பெயராகும். எனவே பதஞ்சவி பிடாரன் தேவாரநாயகம் என அழைக்கப்பெறுதற்கு அவன் கற்றுவல்ல தெய்வ இசைப்பாடலே கருவியா யமைந்ததென்பது உய்த்துணரப்படும்.

திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராசராச தேவரது 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருக் கழுமலம் திருத்தொண்டீஸ்வரமுடைய ந | ய னு ர் கோயிலேயடுத்துத் திருமுறைத் தேவாரச்செல்வன் மடம்” என ஒரு திருமடம் குறிக்கப்பட்டுளது. மூன்ரும் இராசேந்திர சோழனது 4-ம் ஆட்சியாண்டில் முன்னி யூரில் வரையப்பெற்ற கல்வெட்டில் திருத்தோணி புரமுடைய நாயனர் கோயிலேயடுத்துத் திருமுறைத் தேவாரச்செல்வன் குகை என ஒரு திருமடம் இருந்தமை குறிக்கப்பட்டுளது. திருமுறையாகிய தேவாரம் என்ற பொருளிலேயே இத்தொடர்கள் இயைத்துரைக்கப் பெற்று வழங்கி யி ரு த் த ல்

1. தென்னிந்திய கல்வெட்டு, தொகுதி VIII,

எண் 260, ஷெ எண் 575. 2. ஆண்டறிக்கை 1932, எண் 97.