பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 587

இருபத்தொரு துறைகளாக இசைத்துக்காட்டும் நோக் கத்துடன் இருபத்தொரு நரம்புகள் கட்டப்பெற்ற யாழ்க்கருவி பேரியாழ் என்பதாகும். இந் நுட்பம் 'மூவேழ் துறையும் என மேற் காட்டிய தொடர்க்கு 'அன்றி இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனினும் அமையும், எனப் பழைய உரையா சிரியர் கூறிய மற்ருெரு விளக்கத்தால் உய்த்துணரப் படும்.

மேலே குறித்த வண்ணம் ஒவ்வொரு பண்ணிற் கும் உரிய முழு அமைப்பினையும் விரித்து விளக்கும் முறையில் இருபத்தொரு இசைத்துறைகளேயும் குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளில் இசைத்துக் காட்ட வல்ல இசையாளர் பலர் பண்டை நாளில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர். இச்செய்தி,

  • குழவினும் யாழினும் குரல் முதல் ஏழும்

வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்’

(இந்திர, 33.7) என வரும் சிலப்பதிகாரத் தொடராலும்,

துளைக் கருவியானும் நாப்புக் கருவியானும் குரல் முதலாயுள்ள ஏழிசையினும் சரிகம ப த நி என்னும் ஏழெழுத்தினேயும் மூவகை வங்கியத்தினும் நால்வகை யாழினும் பிறக்கும் பண்களுக்கு இன்றியமையாத மூவெழு திறத்தையும் இசைத்துக் காட்டவல்ல பெறு தற்கரிய இசைமரபை யறிந்த குழலர் பாணர் முதலிய இசைக்காரர் இருக்குமிடங்களும்' என அடியார்க்கு நல்லார் இத்தொடர்க்கு எழுதிய உரையாலும் நன்கு புலனும். இவ்வாறே,

இசைபெறு திருவின் வேத்தவை யேற்பத் துறைபல முற்றிய பைதிர் பாண ரொடு ??

|மலேபடு-39, 40)