பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 599

மாதத்தில் இடையாமத்திலே நித்திய கரும அனுட்டா னங்களே முடித்துக்கொண்டு பூசை மடத்தில் வழிபாடு செய்யும்போது ஓதுவா மூர்த்திகள் குறிஞ்சிப்பண் ஒது தலே வழக்கமாகக் கொண்டிருக்கிரு.ர்கள் என்றும், பிற காலத்தில் ஒதுவதில்லேயென்றும் ஆசிரியர் பொன் ைேதுவார வர்கள் எழுதியிருப்பது இங்கு நோக்கத்தக்க தாகும்.

அருட்டுறையிறைவல்ை தடுத்தாட் கொள்ளப் பெற்ற நம்பியாரூரர், திருவதிகையை வணங்கச்சென்று திருநாவுக்கரசர் கைத்திருத்தொண்டு புரிந்த அத் தலத்தை மிதிக்க அஞ்சி அந்நகருட்புகாது அதன் அயலேயுள்ள சித்தவட மடத்தில் இரவில் துயில் கொண்டார். அதிகைப்பெருமானே முது மறையோ ராக அம்மடத்துள் வந்து சுந்தரருடன் உறங்குவார் போலிருந்து ஆரூரர் சென்னியில் திருவடி சூட்டியருளி னர். அப்பொழுது, சுந்தரர் தம்மானே யறியாத சாதியாருளரே என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர் என்பது வரலாறு. இப்பதிகம் கொல்லிக் கெளவாணம் என்ற பண்ணில் அமைந்ததாகும். திருவொற்றியூரிலே சங்கிலியார்க்குக் கூறிய சூள் பிழைத்து அவ்வூரைவிட்டு நீங்கினமையாற் கண்களே யிழந்து வருந்திய சுந்தார், காஞ்சீயில் திருவேகம் பரைப்பரவி இடக்கண் பெற்றுப் பல தலங்களேயும் வணங்கி ஒருநாள் மாலேப்பொழுதில் திருவாரூரை யடைந்து பரவையுண்மண்டளி யிறைவரைப் பாடிப் போற்றித் திருஅத்தயாமகா லத்தில் திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பெருமான ஏதிலார் போல் வினவிக் கைக்கிளைத் திணையிற் பாடிய திருப்பதிகம், குருகு பாய என்னும் முதற்குறிப்புடையதாகும். இப்பதிகம் கொல்லிப்பண்ணிற் பாடப்பெற்றதாகு