பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பன்னிரு திருமுறை வரலாறு

கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான் என்பன் தேவார ஆசிரியர் மூவர் திருவுரு வங்களேயும் தஞ்சை இராசராசேச்சரத் திருக்கோயி வில் எழுந்தருளச் செய்து நாள் வழிபாட்டிற்கு நிவந்த மனித்துள்ளான். தஞ்சைப் பெரிய கோயிலே நிறுவிய வேந்தர் பெருமானை முதலாம் இராசராச சோழன், அக்கோயிலில் நாடோறும் தேவாரத் திருப்பதியம் பாடுதற்குப் பிடாரர் (ஓதுவார்) நாற்பத்தெண் மரையும் அவர்களுக்குத் துணையாக உடுக்கை வாசிப்போர், மத்தளம் முழக்குவோர் இருவரையும் நியமித்து நிவந் தம் வழங்கியுள்ளான். இச்செய்தி, ‘பூரீ ராஜராஜீஸ்வர முஉையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்ய உடையார் ரீ ராஜராஜ தேவர் கொடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலேயாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் இவர்களிலே நி லே ய ய் க் கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும்ஆக ஜம் பதின்மர்க்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேசரியோடொக்கும் ஆடவல்லா னென்னும் மரக்காலால் உடையார் உள்ளுர்ப் பண் டாரத்திலே பெறவும்” எனவரும் கல்வெட்டுப் பகுதி யால், நண்குணரப்படும். தேவாரம் பாடு தற்கு நியமிக் கப்பட்ட பிடாரர்கள் ஐம்பதின்மர் பெயர்களும் சிவன் என்ற பட்டத்துடன் மேற்குறித்த கல்வெட்டிற் பொறிக் கப்பட்டுள்ளன. இவர்களிற் பலர் தேவார ஆசிரியர் களின் திருப்பெயர்களேயே தமக்குரிய இயற் பெயராகக் கொண்டுள்ள சிறப்பினேயெண்ணுங்கால் இ வ ர் க ள் விண்ணப்பஞ் செய்யுந் திருப்பதிகங்கள் மூவர் முதலி கள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பதிகங் களே யென்பது நன்கு விளங்கும். முதலாம் இராசராச சோழனுக்கு முன்னிருந்த சோழ மன்னர் அனைவரும் திருக்கோயில்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய் தற்கு நிபந்தம் வழங்கியுள்ளார்களென்ருலும் அருண்

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 1: எண் 65.