பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

பன்னிரு திருமுறை வரலாறு


' பஞ்சமம் என்னும் இராகமானது, மத்தியமா, பஞ்சமீ என்னும் ஜாதி ராகங்களில் தோன்றிக் காகலி அந்தரங்களோடு கூடிப் பஞ்சம சுரத்தினே முதல், கிழமை, முடிவு ஆகப்பெற்று வருவது; ஹ்ருஷ்யகா என்ற மூர்ச்சனேயையுடையது காமனே அதி தெய்வ மாகப் பெற்றது; முதுவேனிற் பருவத்துக்கு உரியது; நகை உவகை என்னும் சுவைகளே யுடையது; விளைவு' என்னும் நாடகச் சந்தியுள் வருவது” என்பர் சாரங்க தேவர்.

காகலி அந்தரங்களோடு கூடிய வழி ஹ்ருஷ்யகா என்னும் மூர்ச்சனேயானது, இக்காலத்து அரிகாம் போதி மேளத்தை ஒப்பது. இம் மேளத்தில் ஆரோ கனத்தில் காந்தார தைவதங்கள் நீங்கிய ரிம பந-நதி பமகிரி என்னும் ஒளடவ சம்பூரண உருவம் பஞ்சமப் பண்ணுக்கு உரியது என்று கொள்வர் யாழ் நூலார். பஞ்சமப் பதிகங்களைப் பிற்காலத்தார் ஆகிரி ராகத்திற் பாடுதலே வழக்கமாகக் கொண்டனர்.

37. நட்ட பாடை (நைவளம்)

குறிஞ்சிப் பெரும்ப ண்ணின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 37-என்னும் எண்பெற்றது நட்டபா டை. பழந்தமிழ் நூல்களில் ைநவளம் என வழங்கப் பெற்ற பண்ணின் பெயரே வடமொழியில் நாட்ய பாஷா என்ருகி மீண்டும் தமிழில் நட்டபாடை யெனத் திரிந்து வழங்குகிறது. * "1 தமிழர் வழங்கிய நைவளம் என்னும் பண் ணினே வடநாட்டார் கைப்பற்றி, வேசர ஷாடவத்திற்குப் பாஷாங்க ராகமாக்கி, நாட்யா எனப் பெயர் புனைந்தார்கள். வேற்று மொழியிலிருந்து எடுத்து, வடமொழி வழக்கிற் சேர்க்கப் பட்டதெனக் குறிப்பதற்காக, இது நாட்டிய பாஷா” எனவும் வழங்கப்பட்டது. தமிழர் தாம் இழந்த பொருளினே அடை யாளம் கண்டறிய மாட்டாதாராய், தமிழ்’ என்பதைக் குறித்து நின்ற பாஷா என்னும் சொல்லப் பாடை"யாக்கி, தட்ட பாடைப் பெயர் வழங்கி யிடர்ப்படுவாராயினர். இனி, இப்பண்ணினே தைவளம் என வழங்குவதே முறை யாகும் ’’ | யாழ் நூல் - பக்கம் 286.