பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 605

இப்பண் முதல் திருமுறையில் 1 முதல் 22 வரை யுள்ள பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 78 முதல் 82 வரையுள்ள பதிகங்களிலும், பதினுெராந் திருமுறை யில் அம்மையார் அருளிய, கொங்கை திரங்கி " என்னும் முதற் குறிப்புடைய மூத்த திருப்பதிக த்திலும் அமைந்துளது. இதனே வேசரஷாடவ த்தின் பாஷாங்க மாகக் கொள்வர் சாரங்கதேவர். வேசர ஷாடவம் என்பது, சட்ஜ மத்தியமா என்னும் ஜாதி ராகத்தில் தோன்றி, மத்திம சுரத்தை முதல்,முடிவு, கிழமையாகக் கொண்டு, கா கலீ அந்தரங்களோடு கூடி மத்திம மாதி யான மூர்ச்சனையை யுடையதென்பர். மத்திய மாதி யான மூர்ச்சனே யென்பது, குரல் குரலா ன செம்பாலே யைக் குறிக்கும். இக்காலத்தார் இதனே அரிகாம்போதி

மேளம் என்பர்.

இனி, வேசர ஷாடவத்தின் ப ா ஷ ங் க ம | ய், நாட்யா எனப் பெயர் பெற்று நின்ற இராகம், சட்ஜத் தைக் கிரக சுரமாகவும் மத்திமத்தை நியாச சுரமாக வும் பெற்றது. மேலும் இது மத்திமத்தை நிறைந்த சுரமாகப் பெற்றுப் பஞ்சமத்தை விட்டது எனக் கூறப் பட்டிருத்த்லால் இதன் உருவம் ரிகிமதி.ந என்பதாகும் என்றும், எனவே இப்பண்ணுக்குரியதாக இக்காலத் தார் வழங்கும் நாட்டைக் குறிஞ்சி யென்னும் இராகம் இப்பண் ணுக்குப் பொருத்தமானதே யென்றும் கூறுவர் ய ழ் நூலாசிரியர். நட்டபாடைப் பதிகங்களே நாட்டை ராகத்திலும் பாடும் வழக்கம் உண்டென த் தெரிகிறது.