பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் జై0ణ్ణి

61. குறிஞ்சி

குறிஞ்சிப் பெரும்பண்ணின் அரற்று என்னுத் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 61-என்னும் எண் பெற்றது குறிஞ்சி யென்றன் பண். இது முதல் திரு முறையில் 75 முதல் 103 வரையுள்ள பதிகங்களிலும், தான் காந்திருமுறையில் 21-ஆம் பதிகத்திலும், ஏழா ந் திருமுறையில் 90 முதல் 94 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தியுள்ளது. இதனை நாரத சங்கீத மகரந்தம் கூறும் குரஞ்சி யென்னும் இராகமெனக் கொள்ளு மிடத்து, ம - முதலாகிய செம்பாலேயில் நி' குறைந்த தாகக் கொள்ள வேண்டும் என்றும், ம - முதலாகிய நிரலில் நி’ குறைவது, ச - முதலாகிய திரலில் ம’ குறைவதாகுமாதலால் ரிகிபதிந’ என்னும் சுத்த வடிாடவவுருவத்தைக் குறிஞ்சிப்பண்ணுக்கு உரியதாகக் கொள்ளலாம் என்றும் யாழ்நூல் கூறும். குறிஞ்சிப்பண் னமைந்த பதிகங்களை மலகிரி என்ற இராகத்தி லும் அரிகாம்போதி எதுகுல காம்போதி என்ற இராகங் களின் கலப்பிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

62. நட்டராகம்

குறிஞ்சிப் பெரும் பண்ணின் அரற்று' என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 62 என் னும் எண் பெற்றது நட்ட ராகம். இப்பண், இரண்டாந் திருமுறையில் 97 முதல் 112 வரையுள்ள பதிகங்களி லும், ஏழாந் திருமுறையில் 17 முதல் 30 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. " தர்த என்னும் இராக மானது, மத்யமா, பஞ்சமீ என்னும் ஜாதிராகங்களிலே பிறந்தது; பஞ்சமத்தைக் கிழமையாகவும் முதலாகவும் கொண்டது; காகலியோடு கூடியது; ப ஞ் சம ம் முதலாகிய மூர்ச்சனையையுடையது ; நகை, உவகை என்னும் சுவைகளைப் பொருந்தியது ; துர்க்கையை அதிதெய்வமாகக் கொண்டது” என்பர் சாரங்கதேவர்.