பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 615

எண் பெற்றது காந்தாரபஞ்சமம். இது, மூன்ருந்திரு முறையில் 1-முதல் 23வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 10, 11-ஆம் பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 75 - ஆ ம் ப தி க த் தி லும் அமைந்துளது.

“காந்தாரபஞ்சமம் என்பது, காந்தாரி, ரக்த காந்தாரி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றிக் காந்தார சுரத்தினே முதல் முடிவு கிழமையாகப் பெற்று வருவது; ஹாரிஸ்ைவா என்னும் மூர்ச்சனேயுடையது; இராகுவை அதிதெய்வமாகக் கொண்டது , நகை, மருட்கை, அவலம் என்னும் சுவைகளோடு பொருந் தியது” எனச் சங்கீத ரத்தனுகரம் கூறும்.

ஹாரினஸ்வர மூர்ச்சனே மேசகல்யாணியாகும். அதன் உருவத்தை சிகிமிட தி நி’ எனக் கொள்ளலாம். இந் நிரலில் நி, மி என்னும் சுரங்கள் நீங்க எஞ்சி நிற்பது ரிகிபதி'. இதுவே காந்தாரபஞ்சமத்தின் உருவம். இக்கால வழக்கிலே இவ்வுருவமுடையது மோகன ராகமாகும். எ னி னு ம் இடைக்காலத்தார் கரகரப்பிரியா சாகத்தை முதல் மேளமாகக் கொண் டார்கள். ஆதலால் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம், ஷட்ஜம் என எடுத்துப் பின்பு அந்நிரவிலே சாதார ண காந்தாரம் முதல் சாதாரண காந்தாரம் வரையும் இசைக்க மேசகல்யாணிமேளமாகும். இதன் கண் ரிஷப தைவ தங்களே நீக்க, காந்தார பஞ்சமத்தின் உருவம் வந்தெய்தும் என்பர் யாழ்நூலார். காந்தாரபஞ்சமப் பதிகங்களைக் கேதார கெளளையிற் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.