பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616

பன்னிரு திருமுறை வரலாறு


80. கெளசிகம் மருதப்பெரும் பண்ணின் வஞ்சி' என்னுந் திறத் தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 80 என்னும் எண் பெற்றது கெள சிகம். மூன்ருந் திருமுறையில் 43 முதல் 55 வரையுள்ள பதிகங்கள் கெளசிகப் பண்ணுக்கு உரியன.

"கைசிகீ என்னும் ஜாதி ராகத்தில் தோற்றி, சட்சத்தினே முதல், கிழமை, முடிவு ஆகக்கொண்டு, அற்ப தைவதம் உடையதாய்க் காகலியோடு கூடி வருவது மாளவ கைசிகம். இது சட்ஜம் முதலாகிய மூர்ச்சனையுடையது ; வீரம், வெகுளி, வி ய ப் பு என்னும் சுவைகளோடு வருவது, முன் பனிக்காலத் திற்கு உரியது” எனவும், மாளவ கைசிகத்தின் விபாஷாவாக அமைந்த தேவார வர்த்தநீ என்ற இரா கம், சட்ஜத்தை அம்சமாகவும் பஞ்சமத்தை நியாச மாகவும் பெற்றுக் காந்தார நிஷாதசுரங்கள் விடுபட்டு நிற்பது” எனவும் கூறுவர் சாரங்கதேவர். அவரால் தேவார வர்த்த நீ எனக் குறிக்கப்பெற்ற கெளசிகப் பண்ணின் உருவம், ரிமபதி என்றும், வடநாட்டார் "சுர-மல்ஹார என வழங்கும் சுத்தராகம் இவ்வுருவி னது என்றும், இது தென்னுட்டில் சுத்த சாவேரி என வழங்கப்படுவதென்றும் யாழ்நூலாசிரியர் விளக்கம் தருகின்றர். கெளசிகப்பதிகங்களை இக்காலத்தார் பயிரவி இராகத்திற் பாடி வருகின்றனர்.

81. பியந்தைக்கனந்தாரம்

மருதப்பெரும்பண்ணின் செய்திறம் என்பதன் அகநிலையாய்ப் பண்வரிசையில் 81-என்னும் எண் பெற்றது. பியந்தை' என்ற பண்ணுகும். பியந்தை யென்ற இப்பண்ணும் தேவாரத்தில் வரும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றேயெனக் கொள்ளுதல் பொருந்தும்