பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

பன்னிரு திருமுறை வரலாறு


குறை (அற்பம்) ஆகவும் பெற்று, ஷட்ஜம் முதலாகிய மூர்ச்சனையையுடையதாய், வீரம், வெகுளி என்னும் சுவைகளோடு கூடிக், கருப்ப்ம் என்னும் நாடகக் சந்தி யுள் வருவது சாதா ரிதா என்னும் இராகம் என்பர் ச ரங்கதேவர்.

கரகரப்பிரியா மேளம் நிஷாத காந்தாரங்கள் அற்பமாய் (குறையாய்) வருவதாதலின், சாதாரிதா என்னும் இராகம் கரகரப்பிரியா மேளத்தில் தோன்றிய தாதல் வேண்டும். இதன்கண் காந்தார சுரம் மிகவும் அற்பமாய் வருதல் கருதி அதனை நீக்க, இது தேவ மனேகரி என்னும் இராகமாகலாம் என்றும், பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர் பாண பத்திரர் பொருட்டுக் கூட லம்பதியிலே விறகாளாகிப் பாடியது சாதாரிப் பண்ணுதலின், அத் தெய்வ இசை தேவமனேகரி எனப் பாராட்டப்பட்டதென்றும் கூறுவர் யாழ் நூலாசிரியர். சாதாரிப் பதிகங்களேப் பந்துவராளியிற் பாடும் பழக்கம் பிற் காலத்தில் ஏற்பட்டதாகும்.

இசையுருவங்களைப் பிறழாது வளர்ப்பன இசைக் கருவிகள். அவை தோற்கருவி, துளைக்கருவி, நரப் புக் கருவி, கஞ்சக்கருவி என்பன, இந் நால்வகை இசைக்கருவிகளும் திருக்கோயில் வழிபாடுகளில் சிறப் பாக இடம் பெற்றிருந்த செய்தி தேவாரத் திருப்பதி கங்களிற் பல இடங்களிலும் குறிக்கப்பெற்றுளது.

பண்டை நாளில் வாழ்ந்த இசைவாணர்கள், துளேக் கருவியாகிய வேய்ங்குழலேயும் நரம்புக் கருவி யாகிய யாழையும் துணே யாகக்கொண்டே ஏழிசைத் திறங்களேயும் குற்றமற இசைத்து இனிய இசை நுட்பங் களே நன்கு புலப்படுத்திக் காட்டியுள்ளார்கள். இச் செய்தி,