பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622

பன்னிரு திருமுறை வரலாறு

பண் வகைகளே யாழின் பகுதி என வும் இசை நூலே நரம்பின் மறை' எனவும் ஆசிரியர் தொல்காப் பியகுர் குறித்துள்ளார். இக்குறிப்பினே க் கூர்ந்து நோக்குங்கால் முற்காலத்தில் தரம்புக் கருவியாகிய யாழிகின நிலைக்களமாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப் பெற்றன என்பது நன்கு விளங்கும். முற்காலத்தில் வேட்டைத் தொழிலே மேற்கொண்ட மக்கள், அம்பு களே எய்யுங்கால் அவை நெடுந்து ம் விசைத்து செல்லு: தற்கு ஏற்றவண்ணம் வில்லின் கண் நானே இறுகக் கட் டினர். வில் நாணின் இறுக்கத்தைத் தெரிந்து கொள் வதற்கு நாணினே விரலால் தெறித்து அதிலிருந்தெழும் ஓசையை அளவு கருவியாகக் கொண்டனர். வில் நாணின் ஓசையைக் கேட்டு அகன் இசை நுட்பத்தை உணர்ந்த நம் முன் ஆேர்கள், இசைத் தோற்றத்திற்கு இடனுயுள்ள வில் நாணின் நீளத்தைக் குறைத்துங் கூட்டியும் பலவேறு இன்னிசைச் சுருதிகளேத் தோற்று வித்தனர். இவ்வாறு வெவ்வேறு இன்னிசைச் சுருதி களேத் தரும் பல விற்களே ஒன்ருகச் சேர்த்து நெடுங் காலத்திற்கு முன் நம் முன்னுேர்களால் அமைத்துக் கொள்ளப்பெற்ற நரப்புக்கருவி வில் யாழ்' என்பதாகும். ஆனிரை மேய்க்கும் ஆயைெருவன் குமிழமரக் கொம்புகளே வில்லாகவளே த்து அதன் கண் மரல்நாரினே நரம்பாகக் கட்டித் தான் அமைத்துக்கொண்ட வில் யாழிலே குறிஞ்சிப் பண்ணே வாசித் தான் என்ற செய்தி பெரும்பானுற்றுப்படையிற் பேசப் பெற்றுளது. த லேச்சங்க காலத்திற்கு முன் மிகப் பழங்காலத்தில் தோன்றிய வில் யாழினேக் கடைச் சங்கப் புலவராகிய கடியலூர் உருத்திரங் கண்ணனர் தம் காலத்தில் ஆனிரை மேய்க்கும் ஆயன் வாசித்ததாகக் கூறியதன் நோக்கம், அக்கருவியின் தொன்மையினேயும் ஆயர் முதலிய யாவரும் கையாளுதற்கேற்ற அதன் எளிமை