பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 领罗象

யினேயும் இனிமையினேயும் விளக்குதற் பொருட்டே யாகும்.

மிகப்பழங்காலத்தில் தோன்றிய வில்யாழ் ஆகிய இக்கருவியை அடிப்படை யாகக் கொண்டே இசை வளர்ச்சிக்கு இன்றியமையாத பேரியாழ், மகரயாழ். சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை யாழ்களும், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் ஆதியாழும் பிற நரம்புக் கருவிகளும் நுண்ணுணர் வுடைய பெருமக்களால் உய்த்துணர்ந்து அமைக்கப் பெற்றன. ஏழிசைகளேயும் மெலிவு, சமன் வலிவு என்னும் மூன்று தானங்களிலும் முறையே இசைத்தற் கேற்றவாறு மூ:ேழ (இருபத்தொரு) நரம்புகள் கட்டப்பெற்றது பேரியாழாகும். பக்கொன்பது நரம்பு கள் கட்டப்பெற்று மகர மீன் உருவாக அமைக்கப் பெற்ற வடிவினேயுடையது மகர யாழாகும். மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றும் ஆகப் பதின்ைகு நரம்புகளேயுடையதாய்ச் செவிக்கு இன் பந் தரும் இனிய இசையினே த் தோற்றுவிப்பது சகோடயாழ் ஆகும். இதன் பழைய பெயர் செம்முறைக்கேள்வி என்ப தாகும். இக்கருவியினே ஈரேழ்தொடுத்த செம்முறைக் கேள்வி ன இளங்கோவடிகள் வழங்கியிருத்தலால் செம்முறைக் கேள்வி என்ற பழைய தமிழ்ப் பெயரே பிற்காலத்தில் சகோஷம் என வடமொழியில் மொழி பெயர்க்கப் பெற்றுச் சகோடயாழ் எனத் திரிந்து வழங்கியதெனத் தெரிகிறது. மிகப் பழங்காலத்தில் யாழ்க் கருவியில் மிகவும் வஃாவாகச் செய்யப் பட்டிருந்த கோடு என்னும் உறுப்பானது, நிமிர்ந்து நேராக (செம்மையாக) விளங்கும் படி, சிறிது மாற்ற அமைக்கப்பட்ட யாழ்க்கருவி, செங்கோட்டியாழ்' என வழங்கப்பெற்றது. இதன் கண் ஏழிசைகளுள் ஒ: வொன்றுக்கும் ஒவ்வொரு நரம்பாக ஏழு நரம்புக: கட்டப்பேற்றிருந்தன.