பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசத் திருப்பதிகங்கள் 625

உறுப்பின் வளைவினைமாற்றி அதன்கண் ஒரு நரம்பி லேயே ஏழிசைகளே புத் தொடுத்து வாசித்தற்கேற்ற வகையில் நரம்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து அமைக்கப்பெற்ற நரம்புக்கருவியே வீணே என்ப தாகும். ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நரம்பு கட்டப்பெற்றது பண்டைத் தமிழர் வாசித்த யாழ்க் கருவியாகும். ஒரு நரம்பிலேயே பல சுரங்களே வாசித் தற்கேற்ற தானநிலைகளைக் கொண்டது இக்காலத்து வழங்கும் வீணைக்கருவியாகும். தேவா ஆசிரியர் காலத்தில் பண்டைத் தமிழர் வாசித்த யாழாகிய இசைக்கருவியும் அதனை யடியொற்றியமைக்கப்பெற்று வட நாட்டிற் பெருக வழங்கிய வீணையென்னும் இசைக் கருவியும் தமிழ் மக்களால் திறம்பெற வாசிக்கப் பெற்றன என்பது, தேவாரத்திருப்பதிகங்களில் யாழும், வீணேயும் ஆகிய இவ்விரு கருவிகளைப்பற்றி யமைந்த குறிப்புக்களால் இனிது விளங்கும்.

இனி, பழந்தமிழர் கையாண்ட யாழ்க்கருவியும் இக்காலத்தில் நம் நாட்டில் வழங்கும் வீணைக்கருவியும் ஒன்றே யென்பர் சிலர். சங்கத்தொகை நூல்களில் யாழைத் தவிர வீணே யென்பதொரு கருவி கூறப்பட வில்லை. இளங்கே வடிகள் காலத்தில் வீனையென்ற தோர் இசைக்கருவி தமிழ்நாட்டில் வழங்கியதென்பது,

"நாரதன் வீணே நயந்தெரிபாடலும்’ என வரும் சிலப்பதிகாரத் தொடராற் புலளும்,

யாழும் வீணையும் இருவேறு கருவிகள் என்பது, 'அறைகலந்த குழல் மொந்தை வீணையாழும்" (6-40-2) “பண் குெடி வாழ்வீணை பயின்ருய் போற்றி" (6.57-10) ‘ஏழிசையாழ் வினை முரலக்கண்டேன்’ (6–77–1) எனத் திருநாவுக்கரசடிகளாரும்,

'குடமுழவங் கொக்கரை வீணைகுழல் வாழ்” (ஆதியுலா) எனச் சேரமான் பெருமாள் நாயகுரும்,