பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626

பன்னிரு திருமுறை வரலாறு


"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ (திருவாசகம்) எனத் திருவாதவூரடிகளும்,

- - - - - "புகலுமிசை நேர்வைத்த வினைக்கும் யாழுக்கும் நிலவகையிற் சேர்வுற்ற தந்திரிகள்’ (பெரிய-திருநாளேப்-14) என ச் சேக்கிழாரடிகளும் இவ்விரண்டினேயும் இருவேறு இசைக்கருவிளாகப் பிரித்துரைத்தலால், இ னி து புலம்ை. சங்க காலத்திற்குப்பின் தோன்றிய நூல் களிற் குறிக்கப்பெற்றுள்ள விணையாகிய நரம்புக் கருவி, ஒரே முறையில் தொடர்ந்து செல்லும் தொடரிசையினை வாசித்தற் கேற்றது. பழந்தமிழர் கையாண்ட யாழ்க் கருவி தொடரிசையுடன் பலரும் சோந்து பாடும் நிலை யில் அமைந்த ஒத்திசைப் பண்களே வாசித்தற்கேற்ற அமைப்புடையதாகும். சங்கச் செய்யுட்களில் யாழின் அமைப்பினே ப்பற்றி அ ைமந்த குறிப்புக்களையும் அமராவதி கோலி என்னும் இடங்களிற் கிடைத்த யாழ்க் கருவியின் உருவச்சாயலையும், தாராசுரம், திருஎருக்கத்தம்புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவுருவத்தில் அமைந்த சகோடயாழ்க் க்ருவியின் உருவ அமைப்பினையும் கூர்ந்து நோக்குவார்க்கு ய்ாழும் வீணையும் இரு வேறு கருவிகள் என்பது இனிது விளங்கும்.

திருஞான சம்பந்தப்பிள்ளையார் காலத்தவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம் மனைவியார் மதங்க சூன்ா மனியாருடன் சீகாழிப்பதிக்குச் சென்று ஆளுடையபிள்ளையாரை வணங்கி அவர் பாடியருளிய திருப்பதிகங்களைத் தம் யாழில் இசைத்துப் பிள்ளை யாருடன் தமிழ்நாடெங்குஞ் சென்று நாளும் இன்னிசைத் திறத்தால் தெய்வத்தைப் போற்றிஞர் என்பது வர இன்று, அவர். வாசித்த யாழ்க்கருவி சக்ோடயாழ் என்னும் பெயருடையதென்பது, திருநீல