பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640

பன்னிரு திருமுறை வரலாறு


ஐம்பொறி வழியாகச் செல்லும் ஐந்து அவாவை யும் அடக்கியாளும் உள்ளத்திண்மை, பொறிவாயில் ஐந்தவித்தாகிைய இறைவன் அருளிய ஒழுக்க நெறி யினைக் கடைபிடித்தொழுகுவார்க்கே எ னி தி ல் வாய்க்கும். இதனை யுணர்ந்து இறைவன் திருவருளே ச் சிந்தித்து அதன் வழி யடங்கியொழுகுதலே அறிவு ைட ய ந ன்ம க் க ள் மேற்கொள்ளுதற்குரிய நல் கிலாழுக்க நெறியாகும். அந்நெறியினைப் பின்பற்றி நடவாது தமது சிற்றறிவொன்றையே முதன்மையாகக் கொண்டு தாம் தாம் நன்றெனக்கண்ட தெளிவற்ற கொள்கைவழியே நலம் பெற முயலும் புத்தர் சமணர் என்னும் புறச்சமயத்தார் மே ற் .ெ க | ண் ட செயல் முறைகள் இம்மை மறுமையாகிய இருமையினும் துயர் விளக்கும் பழிச்செயல்களே என்பதனைத் தமிழ் மக்கள் தெளிவாக உணரும் வண்ணம் பதிகந்தோறும் பத்தாம் பாடலில் பிள்ளையார் வற்புறுத்தியருள்கின்ருர்.

வேதகா ரனராய வெண்பிறைசேர் செய்யசடை

நாதனெறி யறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும்

போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்

ஏதமே யெனமொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்’ எனவரும் பெரிய புராணச் செய்யுள் இந்நுட்பத்தை விளக்குதல் காணலாம்.

இவ்வாறு, ஆளுடைய பிள்ளையார் அருளிய திருப் பதிகந்தோறும் 8, 9, 10-ஆம் பாடல்களாகிய மூன்று திருப்பாடல்களிலும் முறையே, உயிர்கள் தம் பிழை நினைந்து ஏசறுதல், பாசஞானத்தாலும் பசுஞானத் தாலும் காண் டற்கரியன் பரன் என்றுணர்தல், இறை வனருளிய மெய்ம்மையான ஒழுக்கநெறியன் றிச் சிற்றறிவுடைய மக்கள் தம் ஆன்ம போதம் ஒன்றின. லேயே அமைத்துக்கொண்ட புறச்சமயச் செயல்கள் புன்னெறியிற் செலுத்துவனவே எனவுணர்ந்து அவற்றை விலகியொழுகுதல் ஆகிய இவை மூன்றும் கடவுள் வழிபாட்டிற்கு இன்றியமையாத சாதனங் களாக அறிவுறுத்தப்பட்டன.