பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 64;

திருப்பதிகந்தோறும் இறுதிப்பாடலாக அமைந்த திருக்கடைக் காப்புச் செய்யுட்கள் யாவும் சிவபரம் பொருளேத் திருப்பதிகப்பாமாலேயாற் போற்றி வழி பாடு செய்யும் அன்பர்கள் எல்லா நலங்களும் பெற்று ஈறிலாப் பேரின்ப வாழ்வில் திளேக்கவேண்டும் என்னும் பெருங்கருணேத் திறத்தால் நிறைமொழி மாந்தராய ஆளுடைய பிள்ளே யார் ஆணையிற் கிளந்த மறை மொழிகளாத் திகழ்கின்றன.

நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளியுள்க

வினேகெடுதல் ஆணே நமதே ? 2–84–1 ; ஆனசொன் மாலேயோதும் அடியார்கள்

வானில் அரசாள்வர் ஆணே நமதே ’ 2-85 - 1:

  • சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்

என்ன நிகழ் வெய்தியிமையோர் அந்தவுல கெய்தியரசாளு மதுவே

சாதம் ஆணே நமதே ' 3-78-#1 வானிடை நிகழ்வர் மண்ணிடைப்பிறவார்

மற்றிதற் காணேயும் நடிதே ’ 3–118-11

என வரும் வாய்மொழிகள், ஞானசம்பந்தர் உலக நன்மை கருதித் தம்மீது ஆணையிட்டுக்கூறிய தமிழ் மந்திரங்களாகத் தி க ழ் த ல் அறியத்தக்கதாகும். இவ்வாறு தெய்வத்தின் திருவருளே உலக மக்கள் இம்மை வாழ்வில் தெளிவாக உணர்ந்து மகிழ்தல் வேண்டும் என்னும் அருட்குறிப்புடன் அடியார் களுக்குத் தம் வாய்மொழியில் உறுதியான நம்பிக்கை யுண்டாம் வண்ணம் பிள்ளையார் ஆணையிட்டுக் கூறியதிறத்தை,

  • முத்திப் பகவன் முதல்வன் திருவடியை

அத்திக்கும் பத்தரெதிர் ஆனேநம தென்னவலான் 21

என நம்பியாண்டார் நம்பி இனிது விளக்கியுள்ளார்.

1. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை,