பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 545

  • நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகு மராகம்

சால் பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிகம்

மூல இலக்கிய மாக எல்லாப் பொருள்களும் முற்ற

ஞாலத் துயர்காழி யாரைப் பாடி னுர் ஞானசம்பந்தர்’ என வரும் செய்யுட்களில் சேக்கிழாரடிகள் விரித்துக் கூறியுள்ளார்.

செய்யுளகத்து மொழிகள் தம்முட் புணரும் முறை, நிரல் நிறை, சுண் ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப்படுமென்றும், அவற்றுள் மொழிமாற்ருவது, செய்யுளகத்து அமைந்து நின்ற சொற்கள் அவை நின்ற நிலேயிற் பொருள் விளங்காத வழி அச் செய்யுட் பொருளுக்குப் பொருந் த அச் சொற்களே முன்னும் பின்னும் மாற்றிப் புணர்த்துப் பொருள் கொள்ளுத லாகிய பொருள் கோள் முறை யென்றும் கூறுவர் தொல்காப்பியர்ை. செய்யுளில் சில இ ட ங் க ளி ல் தன்னியல்பில் மாறி நின்ற சொற்களே ப் பொருள் எதிர் இயையப் புணர் க்கும் பொருள் கோள் முறையிலன்றி, செய்யுட்களேக் கற்போர் அச்செய்யுட் பொருளைக் கூர்ந்து நோக்கி இப்பொருள்கோள் முறையுணர்ந்து சொற்களே முன்னும் பின்னும் இயைத்துப் பொருள் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இயற்றப் படுவது மொழிமாற்று’ என்னும் மிறைக் கவியாகும். இவ்வாறு பொருளுக்கு ஏற்பச் சொற்களே முன்னும் பின்னும் மாற்றிப் புணர்த்துப் பொருள் கொள்ளும் நிலையில் அமைந்த செய்யுளமைப்பினேயே மொழி மாற்று’ எனச் சேக்கிழார் வழங்கியுள்ளார்.

'காட தணி கலம் காரரவம்பதி காலதனில்

தோட தனிகுவர் சுந்தரக் காதினிற் றுச்சிலம்பர்

வேட தணிவர் விசயற்குருவம் வில்லுங் கொடுப்பர்

பீட தணிமணி மாடப் பிரடி புரத்தரரே?

  • தொல் காப்பியம்-எச்சவியல் - சூத்திரம் 8, 13.