பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648

பன்னிரு திருமுறை வரலாறு


இரண்டாமடி முச்சீராய்ச் செப்பலோசை பெற்று இவ் வாறு இரண்டடிகளால் இயன்றுவரும் குறள் வெண்பா வாகும். ஆளுடைய பிள்ளையார் அருளிய திரு இருக்குக் குறள், இரு சீரடியாகிய குறளடி நான்கினல் அமைந்த சந்தச் செய்யுளாகும். எனவே திருக்குறள் யாப்பும் திருவிருக்குக் குறள் யாப்பும் தம்முள் வேருதல் உணரத் தக்கதாகும்.

ஏகபாதம்,எழுகூற்றிருக்கை என்பவற்றின் இயல்பு முன்னர் விளக்கப் பெற்றது. மூன்றந் திருமுறையில் 110, 11 1, 112 என்னும் எண்பெற்ற மூன்று பதிகங் களும் ஈரடிகளால் ஆகிய திருப்பாடல்களையுடையன. எனவே அவை ஈரடி என வழங்கப் பெறுவன. மூன்ருந் திருமுறையில் 5,6-ஆம் பதிகங்கள் ஈரடிச் செய்யுளின் மேல் ஈரடி வைப்பாக அமைந்திருத்தலால் ஈரடி மேல் வைப்பு’ எனவும், இத்திருமுறையில் 3,4 ஆம் பதிகங் களும் 108-ஆம் பதிகமும் நாலடிச் செய்யுளின் மேல் ஈரடி வைப்பாக அமைந்திருத்தலால் 'நாலடி மேல் வைப்பு எனவும் பெயர் எய்தின."

முதல் திருமுறையில் 19 முதல் 22 வரையுள்ள நட்டபாடைப் பதிகங்களும், 120 முதல் 125 வரை யுள்ள வியாழக் குறிஞ்சிப் பதிகங்களும், இரண்டாந் திருமுறையில் 29 முதல் 84 வரையுள்ள இந்தளப் பதிகங்களும் 97, 98, 100, 101-ஆம் எண்ணுள்ள நட்ட ராகப் ப தி க ங் க ளு ம், மூன் ருந் திருமுறை யில் 52, 33-ஆம் எண்ணுள்ள கெளசிகப் பதிகங்களும் 67 முதல் 38-வரையுள்ள சாதாரிப் பதிகங்களும் முடுகிய லாகிய திரு வி ரா. க த் திருப்பாடல்களாக அமைந்திருத்தல் காணலாம்.

1. இந்நூல் பக்கம் 465.

2. 3 , 484.