பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் శ్రీక్ష

யாவும் ஏனே மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுவது, கூட சதுர்த்தம் என்பர் அணி நூலார். கூடம்-மறைவு. சதுர்த்தம்-நான்காவது, மறைவான நான்காம் அடியினேயுடையது என்பது இ த ன் பொருள். எனவே நான்காமடியிலுள்ள எழுத்துக் களெல்லாம் மற்றைய முதல் மூன்றடிகளுள்ளும் நிற்றல் "கூட சதுர்த்தம்’ என்ற சித்திரகவியின் அமைப்பாதல் பெறப்படும்.

ஆளுடைய பிள்ளையார் அருளிய மண்னது வுண்டரி மலரோன்’ என்னும் முதற்குறிப்புடைய பதிகப் பாடல்களின் நான்காமடிகளில் மு ன் னே மூன்றடிகளிலும் இல்லாத எழுத்துக்கள் சில இருத்த லால், இப்பாடல்களின் நான்காமடியில் உள்ள எழுத்துக்கள் யாவும் ஏனே மூன்றடிகளிலும் மறைந் துள்ளன எனக் கருது தற்கு இடமில்லே. அன்றியும் இப்பதிகப் பெயர், கூடற் சதுக்கம் கூட சதுக்கம் என்றே குறிக்கப்பட்டுளது. கூட சதுர்த்தம் என்ற பெயரால் இப்பதிகம் வழங்கப்ப்ெறவில்லை. ஆகவே தேவாரத் தில் அமைந்த கூடற் சதுக்கம் என்ற இம்மிறைக் கவியும் பிற்காலத்தில்கூட சதுர்த்தம் என்ற பெயரால் வழங்கப்பெறும் சித்திரகவியும் தம்முள் வேறனவே கொள்ளுதல் பொருந்தும்.

நான்கு தெருக்கள் ஒன்ருகக் கூடும் இடத்தைச் ‘சதுக்கம் என வழங்குதல் மரபு. அம்முறையில் திரு மயேந்திரம்.திருக்கயிலாயம்,திருவாரூர், திருவானைக்கா என்ற நான்கு தலங்களும் ஒன்றுகூடிய நிலேயில் அந்நான்கு தலங்களிலும் கோயில் கொண்டருளிய பெருமானப் பரவிப்போற்றுவதாக அமைந்தது.

மண்ணது வுண்டரி மலரோன் காணு வெண்ணுவல் விரும்பு மயேந்திரருங் கண்ணது வோங்கிய கயிலேயாரும் அண்ணலா ரூராதி யானைக்கா வே.