பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658

பன்னிரு திருமுறை வரலாறு


7. இறைவன் கோயில் கொண்டருளிய தலத்தி னுட் புகும்பொழுது திருவுடைய செழும்பதியாகிய அதனைத் தெய்வ நிலையில் வைத்து மலர்தூவி அருச் சிக்கும் முறையிற் பாடிய திருப்பதிகங்களும் சில உள்ளன,

  • சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆளுரைப்

பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே ’ i-9 i-1 என் ருங்கு வருவன இவ்வகையில் அடங்கும்.'

8. ஒரு தலத்தினுள்ளே புகும்பொழுது, அங்குத் தம்மை எதிர்கொண்டழைத்த பெரியோர்களாகிய சிவனடியார்களே ஆர்வமுடன் நோக்கி, உங்கள் பெருமான் என்னேயும் ஆட்கொள்வரோ என வினவும் முறையில் அமைந்த திருப்பதிகமும் உண்டு.

அந்தமாயுல காதியு மாயினுன் வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் சிந்தையே புகுந் தான்திரு ஆரூரெம் எந்தை தானென என்று கொளுங் கோலோ’

3-45— ?

என்ற திருப்பாடலே முதலாகவுடையது அத் திருப் பதிகமாகும். ஆளுடைய பிள்ளேயார் அருளிய இத் திருப்பதிகத்தை நன்கு பயின்ற சுந்தரர், திருவாரூருட் புகும்பொழுது தம்மை எதிர்கொண்டழைத்த ஆரூர் மக்களே நோக்கி ஆர்வமுடன் வினவும் முறையில்,

கரையுங் கடலும் மலேயுங் காலேயு மா லேயு மெல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க்

கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும்

ஆள்வரோ கேளிர் 7-73-1 எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய் திருத்தல் இங்கு ஒப்புநோக்கி யுன ரத்தகுவதாகும்.

CAGGGGMMMAMMACCCACAAAS

!, திருமுறை 193, 11 112-ஆம் பதிகங்களே நோக்குக.