பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662

பன்னிரு திருமுறை வரலாறு


16. ைற வன து திருப்பெயராய்த்திகழும் திருவைந்தெழுத்தின் பெருமையினையும் ம ந் தி ர மாகிய அதனைக் காதலாகிக் கசிந்து ஒதுவார் எய்தும் நலங்களையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

‘துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினேமின் நாடொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற் றஞ்ச வுதைத்தன் அஞ்செழுத்துமே (3-22-1) எனவரும் பஞ்சாக்கரத் திருப்பதிகமும்,

‘காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே’ (3–49–1) எனவரும் நமச்சிவாயத் திருப்பதிகமுமாகும்.

17. இயல்பாகவே பா சங்களின் நீங்கி முற்றறி வின் உருவாக விளங்கும் முதல்வன், உலகப் பொரு ளொன்றினுந் தோய்வின் றித் தானே தன் பேரொளி யால் விளங்கும் தன்னுண்மை நிலையிற் 'சிவம் எனவும், உலகெலாம் ஆகி வேருய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் வழிநிற்கும் நிலேயிற் சத்தி’ எனவும் பிரிவிலாது ஒன்ருந் திறத்தால் இரு திறப்பட்டு, பின் ஐந்தொழில் செய்யும் தன்மையிற் பதி, எனப் பெயர்பெற்று நிற்பன் என்பது சிவாகம நூற்றுணிபு. இறைவனுக்குரிய பொதுவும் சிறப்புமாகிய இவ்விலக் கணங்களே யெல்லாம் உலகமக்கள் .ெ த ரி வ க உணர்ந்து உய்திபெறும் முறையில் ஆளுடைய பிள்ளே யார் அரும்பொருள் நிறைந்த பல திருப்பதிகங்களே அருளிச்செய்துள்ளார்.

பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பொருளே, உமையம்மையார் அளித்த ஞானப்