பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் ళొE3

பாலடி சிலேப் பருகியதனுல் விளைந்த பதிஞானத்தாலே தேசமொடும் நேரே காணப்பெற்றவர் ஆளுடைய பிள்ளே பார். சிவஞானச் செல்வராகிய அப்பெருந்தகை யார், சுட்டுணர்வுக்கு எட்டாத தனிமுதற் பொருளே நேரே கண்டு எம்மை இது செய்த பிரான் இவனன்றே" எனத் தம் தந்தையார்க்குச் சுட்டிக்காட்டும் நிலேயில் அருளிச் செய்தது, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகமென்பது முன்னர் விளக்கப் பெற்றது. இ த் தி ரு ப் ப தி க ம், உயிர் களின் உள்ளத்தின் உள்ளிருந்து உறுதிகாட்டி உயிர்க் குயிராய் விளங்கும் தம்முதல்வனே முன்னத் தவப்பயனுல் க ண் ணு க் கு ப் புலகைப் புறத்தே அருளுருக் கொண்டு அம்மையப்பனும் ஆசாகை எழுந்தருளிய திறத்தை விரித்துக் கூறுவதாகும். இவ்வாறே திருவாய்மூரில் இறைவர் ஆடல் காட்டி யருளிய திறத்தை நேரிற் கண்டு மகிழ்ந்த ஞான சம்பந்தர் தாம்கண்ட தெய்வக் காட்சியைத் தம் அன் புடைய நண்பராகிய அப்பரடிகளுக்குச் சுட்டிக் காட்டும் நிலேயில் அமைந்தது,

தளரிள வளரென உமைபாடத் தாளம்மிடவோர் கழல் வீசிக் கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரின முலேயவர்க் கருள் நல்கி வெண்ணிறனிந்தோர்

சென்னியின் மேல் வளரிள மதியமொ டிவராணிர் வாய்மூரடிகள் வருவாரே'

(2–t 11-i ) என வரும் திருப்பதிகமாகும். இங்ங்னம் ஒரு வணுகிய இறைவன் உருவம் அருவம் அருவுருவம் என முத் திறப்பட்ட பலவேறு திருமேனிகளையும் மேற்கொண்டு உலகம் உய்யும் வண்ணம் காலந்தோறும் நிகழ்த்திய அருட்செயல்களாகிய புராண வரலாறுகளைப் பரவிப் போற்றும் முறையில் ஆளுடைய பிள்ளேயார் திருவாய் மலர்ந்தருளிய பதிகங்கள் பலவாகும். இவையாவும்