பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவனுக்குரிய பொதுவியல்புகளையும் சிறப்பியல்பு களேயும் விரவிக்கூறும் நிலேயில் அமைந்திருத்தல் காணலாம்.

இனி இறைவனது, சிறப்பியல்பாகிய சொரூப இலக்கணம் ஒன்றினேயே சிறந்தெடுத்துக் கூறும் முறையில் அமைந்தது,

'கறையணி வேலிலர் போலும் கபாலந்தரித்திலர் போலும்

மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் பறையும் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையுஞ் சடைக்கில்ர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே”

(2-65–1)

எனவரும் பிரம புரத்திருப்பதிகமாகும். இ ைற வ ன் செய்தனவாகப் புராணங்களிற் கூறப்படும் செயல்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறி, இச்செயல்கள் யாவும் அண்ணலாகிய இறைவனுற் செய்யப்பட்டன அல்ல என மறுத்துரைக்கும் முறையில் இப்பதிகப் பாடல்கள் அமைந்திருத்தல் காணலாம். உலகப் பொருள்கள் ஒன்றிலும் தோய்வற நிற்கும் தன்னுண்மை நிலையிற் 'சிவன்’ எனத் திகழும் தனிமுதல்வன், முன் கூறப்பட்ட படைத்தல் முதலிய .ெ தா ழி ல் க ள் எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நி லே யி லு ம் தான் அத் தொழில்பற்றி விருப்பு .ெ வ று ப் - க் கொள்ளாது அவற்றில் தோய்வற விளங்குதல்பற்றி, இறைவன் செய்தன வாக முற் கூறப்பட்ட செயல்கள் யாவும் ஏகதேச நிலே யில் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனுற் செய்யப்பட்ட ன வல்ல என உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நிலையில் ஞான சம்பந்தர் இத்திருப்பதி கத்தை அருளிச் செய்துள்ளார். இந் நுட்பம்,