பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672

பன்னிரு திருமுறை வரலாறு


நெறியாகிய மாதவம்’ எனப்படும் தெய்வ வழிபாட்டு நெறிமுறைகள் அனே த்தும் உலக மக்கள் நலம் பெறற் பொருட்டு இறைவனுல் வகுத்தருளிச் செய்யப் பெற்றனவாம்.

‘மண்ணின் மறையோர் கருவு வைதிகமு மாதவமு

மற்று முலகத் தெண்ணில் பொருளாயவை படைத்த இமையோர்கள்

பெருமான்' (3-80-6; 'ஆகம செல்வளுரை' [3–57-10; என வரும் ஆளுடைய பிள்ளையார் வாய் மொழியால்

இவ்வுண்மை இனிது புலளும்.

மக்கள் தம் உயிரினும் சிறந்த ஒழுக்க நெறியினே மேற்கொண்டு வாழ்தற்கு இன்றியமையாத உலகிய லொழுகலாறுகளே விரித்துரைப்பன நால் வேதங்கள். அறத்தையே அறிவுறுத்துவனவாகிய இந்நூல்களே "அறங்கரை நாவின் நான் மறை” எனச் சிறப்பித்தார் பனம்பாரனர். வேதத்தால் அறிவுறுத்தப்பெறும் அற நெறிகள் எக்காலத்தும் மாருத இயல்புடையன என் பார், "நால் வேத நெறிதிரியினும் திரியாச் சுற்ற மொடு எனக் குறித்தார் முரஞ்சியூர் முடிநாகராயர். வேதத்தலே தருபொருளாகிய உபநிடத நுண்பொருள் களே விரித்துரைப்பன வாய் எல்லாம் வல்ல இறைவன யடைந்து இன்புறு தற்கு இன்றியமையாத நெறிமுறைக ளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் சிறப்பு முறையில் எடுத் துரைப்பன சிவாகமங்கள். பொதுவும் சிறப்புமாகிய இவ்விரு வகை மெய்ந்நூல்களேயும் இறைவனுரல்’ எனப்

போற்றுவர் பெரியோர்.