பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 6?翁

யுடைத்தாய் ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒப்பற்ற பழைய நூல் வேதம். வேதத்திற்கு டிாருண நூல்களேச் செய்தோர் புத்தர் சமணர் முதலிய புறச்சமயத் தோர். அன்னேரது தருக்க வாதத்தின் மிகுதியைக் கெடுத்து அவர்களாற் கூறப்படும் மெய்போன்ற உரைகளின் பொய்ம்மையை அறிந்து அதனே மெய்யென்று கரு தாமல் உண்மைப் பொருளே மக்களுக்கு ஏற்பச்சொல்லி இருபத்தொரு வேள்வித் துறைகளேயும் குறையின் றிச் செய்து முடித்த பார்ப்பார்பலர் மு ற் க | ல த் தி ல் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். அவர்கள் வழியில் தோன்றிக் கடைச்சங்க காலத்தில் வ | ழ் ந் த வனே சோளுட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனி யன் விண் ணந்தாயன் என்பான். அம்மறையோன் சிவபெருமான் அருளிய வேதநெறியில் ஒழு கிச் சிறந்த பல வேள்விகளைச் செய்து முடித்த திறத்தை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பெருமான் புறநானூறு 166-ம் பாடலில் பார்ப்பன வாகை என்னுந் துறை யில் வைத்துப் பாராட்டிப் போற்றியுள்ளார். அவர் பாடிய புறப்பாடலில்,

  • நன்ருய்ந்த நீணிமிர்சடை

முது முதல்வன் வாய்போகாது

ஒன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்த ஒருமுது நூல்' என வேதம் புகழப்பெறுகின்றது. இதல்ை வேதத்தை அருளிச்செய்த முதல்வன் சிவபெருமானே என்பது

  • இருபத்தொரு வேள்விகளாவன :-ஸோம யஞ்ளும் 7,

ஹவிர் யஞ்ளும் 7, பாக யஞ்ளும் 7, ஆக 21. அக்கினிஷ் டோமம், அதியக்கினிஷ்டோமம், உக்தியம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்திரம், அப்தோர் யாமம் இவை ஏழும் ஸோம யஞ்ளுங்கள். அக்னியா தேயம், அக்கினி ஹோத்திரம், தரிச பூர்ண மாசம், சாதுர் மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஆக்கிரயணம், லெளத்திராமணி இவை ஏழும் ஹவிர் யஞ்ளுங்கள். அஷ்டகை, ஆபார்வனம், சிராத்தம், சிராவணி,

ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆச்வயுஜி இவை யேழும் பாக யஞ்ளுங்கள்.