பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 633

நீராடாமையும், காற்றிற் பரவியுள்ள உயிர்கள் வாயில் அகப்பட்டும் வெப்பக்காற்ருல் தாக்கப்பெற்றும் வருந்து மென்று அஞ்சி உண்ணும்போது உரையாடாமையும் முதலிய பல நியமங்களே அக்கால அமணத் துறவிகள் தமக்குரிய சிறப்புடைய தவச் செயல்களாகக் கைக் கொண்டொழுகினர்.

தலே பறித்தல் (லோச்சு), உடையினை நீத்தல் (திகம்பரம்), நீராடாமை, சுடுபாறையிற் கிடத்தல், பல் விளக்காமை, நின்றுண் ணல், ஒரு நாளேக்கு ஒரு பொழுதே உண்ணல் என்னும் இவையே.ழும் சமணர் களுடைய ஒழுக்கமுறை என்பர். சம்பந்தர் காலத் தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சமணர்கள் இச் செயல்களே மேற்கொண்டு கொல்லாமை ஊனுண் ளுமையாகிய சிறந்த அறங்களே மக்களுக்கு விரித் துரைத்தனர்; தம் சமயத்தைப் பரப்புதலேயே குறிக் கோளாகக் கொண்டு தருக்க சாத்திரத்தில் வல்லவர் களாய் ஏனேச் சமயத்தார்களே வாதுக்கழைத்தனர்; சாவாயினும் வாது செய்யும் விடாப்பிடியுடையவர் களாய் விருது கூறித் திரிந்தனர்; வேத வேள்வி களேயும் சிவநெறியையும் இகழ்தலேயே தமது தொழி லாகக் கொண்டனர்; தாம் கற்றுவல்ல நூற்பொருள் களாலன்றி வெறுந் தர்க்கவாதத்தையே கருவியாகக் கொண்டு புலவர்களேப் பழித்து வந்தனர்; தமிழ் மொழியையோ அன்றி வடமொழியையோ அவற்றின் இலக்கணங்களை மதித்து அதனதன் தனித்தன்மை சிதையாதபடி பேசிப்பழகாமல், அவ்விரு மொழிகளே யும் உருச் சிதைத்து விரவுமொழியாக்கி மணிப் பிரவாள நடையிற் பேசினுர்கள்; பாகத மொழி யினேயே தமக்குரிய மொழியாகக் கொண்டனர்.

சமணர்களைப்போலவே புத்தர்களும் வைதிகத் ைதயும் சைவத்தையும் இகழ்ந்துரைத்தலேயே தமது