பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684

பன்னிரு திருமுறை வரலாறு


பொழுது போக்காகக்கொண்டு திரிந்தனர் என்பது, அவ்விரு சமயத்தார் களேப் பற்றியும் ஆளுடைய பிள்ளேயார் கூறிய பல குறிப்புக் களால் நன்கு புல குைம். புத்த சமயத் துறவிகள் மருதம்பூ முதலிய வற்ருலாய சாயந்தோய்த்த துவராடையினே யுடுத்துக் கொள் வர். அன்னேர், பெண்களேப் போன்று தம் உடம்பு முழுவதும் ஆடையாற் போர்த்துக்கொள்வர். சமணர்களில் துறவிகள் ஆடையினே உடுத்துக் .ெ கா ஸ் ள து வெற்ற ைரயினராயிருந்தமையால் அமணர் எனப் பெயர் பெற்றனர். சமணர்கள், அஃறினேயுயிர்களிடத்தும் இரக்க முடைய ராய்க் கொல்லா நோன் பினே மேற்கொண் டமையால் புலால் உண்ணுதலைக் கொடிய பாவமாக வெறுத்து விலக் கினர். புத்தர்கள், கொல்லாமை என்னும் நோன்பினே மட்டும் ஏற்றுக் கொண்டு, ஊனுண்ணுமையாகிய அறத் தைக் கடைப்பிடிக்க மல் தம் முயற்சியின் றிப் புலால் உணவு தானே கிடைத்தால் உண்ணுவதில் தவறில் லே யென்று கருதி, ஊனுண்ணும் பழக்கத்தை விடாதொழு கினர். உணவுண்ணும்போது ஒரிடத்தில் அமைதியாக இருந்து உண்ணும் பழக்கமுடையவர்கள் புத்தர்கள். சமணத் துறவிகளோ நின்றுண்ணும் பழக்கமுடை யவர்கள் புத்தர்கள் மண்டையென்ற உண்கலத்தில் உண்பவர்கள். சமணர்கள் காலத்தில் உண்மைல் கையிலிடப்பெற்று உண்ணும் பழக்கமுடையவர்கள்.

இங்ங்னம் தத்தமக்குரிய வழக்க ஒழுக்கங்களால் மாறுபட்டுள்ள புத்தர் சமணர் ஆகிய இரு திறத்தாரும். வேத வேள்விகளையும் சைவசமயம் முதலியவற்றின் தெய்வ வழிபாட்டு முறைகளையும் இகழ்ந்து பேசுவதில் தமக்குள் ஒத்த கருத்தினராயிருந்ததால், தேவார ஆசிரியராகிய பெருமக்கள், புறச்சமயத்தாராகிய அவ் விருதிறத்தார் செய்யும் தீங்குகளேயெல்லாம் ஒருங்கே இனத்துக் கூறிக் கண்டித்துள்ளார்கள்.