பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686

பன்னிரு திருமுறை வரலாறு


பொருளின் உண்மைத் தன்மை ஒன்று, அதன் இருத்தல் வகை மற்ருென்று. பொருளின் இயல்பே உண்மைத்தன்மை யெனப்படும். அத்தன்மை என்றும் நிலைபேறுடையது. அப்பொருளின் இருத்தல்வகையோ என்றும் ஒரு தன்மையாயில்லாமல் தோன்றியும் அழிந் தும் மாறிக்கொண்டே வருவது என்பர் சயனர். எனவே எல்லாப் பொருளும், நிலேயாகிய உண்மைத்தன்மையும் மாறியழிதலாகிய இன் மைத் தன்மையும் ஒருங்குடை யன என்பது சமண் சமய த்தாரது துணிபாதல் பெறப் படும். இத்துணியினைப் புலப்படுத்தும் முறையிலேயே அஸ்தி நாஸ்தி' என்னும் வடமொழித் தொடர் சமணர் களால் அடிக்கடி பயன் படுத்தப் பட்டுவருகின்றது.

கடவுளாகிய முழுமுதற் பொருள் உண்டோ இல்லே

யோ என்னும் ஐயறவுக்கு இடனின்றிக் "கடவுள் உண்டு என்று உறுதியாகத் தெளிந்து வடுழிபதலே பண்டைத்தமிழ் மக்கள் மேற்கொண்டொழுகிய சமயக் கொள்கையாகும். இவ்வுண்மை,

ஐயத்தி னிங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நனிய துடைத்து '

எனவரும் தமிழ் மறையாலும், இத் தமிழ்மறைப்பொருளே வற்புறுத்தும் நோக்கத்துடன்,

தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்’ எனச் சேர முனிவராகிய இளங்கோவடிகள் தாம் இயற்றிய செந்தமிழ்க் காப்பியத்தின் முடிபொருளாக அறிவுறுத்திய வாய்மொழியாலும் நன்கு துணியப்படும்.

சமணர்களே நோக்கித் தெய்வம் என்பதொரு பொருள் உண்டா இல்லேயா என வினவினுல், அவ் வினவுக்கு உண்டு என்ருே இல்லே’ என் ருே ஒருதலை யாக விடை கூறுவதில்லை. அஸ்திநாஸ்தி’ என மேற் குறித்த கொள்கையினே அடியொற்றி, உடன் பாட்டு