பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 587

நிலையில் வைத்து, (1) கடவுள் உண்டு போலும்’ எனவும், எதிர்மறை நிலையில் வைத்து, (2) கடவுள் இல்லே போலும் எனவும், உடன்பாடு எதிர்மறை ஆகிய இவ்விரு நிலையும் நிரலே அமைய (3) கடவுள் உண்டு மாம் இல்லேயுமாம் எனவும், இவ்விரு நிலையிலும் ஒருங்கு வைத்துணர்தல் இயலாமையால் (4) "கடவுள் சொல்லொணுதது போலும் என வும், சொல்லொணு நிலேயுடன் முற்கூறிய உடன்பாட்டு நிலேயையும் சேர்த்து (5) கடவுள் உண்டுமாம் சொல்லொனதது மாம்” எனவும், சொல்லொணு நிலையுடன் முற்கூறிய எதிர்மறை நிலையையும் சேர்த்து (6) கடவுள் இல்ல தும் சொல்லொணுததுமாம் எனவும், சொல்லொன நிலேயுடன் உடன்பாடு எதிர்மறை ஆகிய நிரல் நிறை நிலே யையும் சேர்த்து, (7) கடவுள் உள்ளதும் இல்ல தும் சொல்லொணு ததுமாம் என வும் இவ்வாறு ஏழு பகுதிகளாக விடை கூறுவர் சமணர் . இங்ங்னம் ஒரு பொருளின் இயல்பினையும் இருப்பினையும் விரித்துக் கூறுங் கூற்றுக்கள் ஏழு பகுதிகளாக அமைதலின் இவ் வுரையாடல் முறையைச் சப்த பங்கி’ என்பர். இங்ங் னம் கடவுட் கொள்கைபற்றி ஒன்ருேடொன் ருெவ் வாதவற்றைக் கூறி மக்களது மனத்தைத் தெளிவற்ற குழப்ப நிலைக்கு உள்ளாக்கி வரும் இப்பொருந்தாக் கொள்கையினே,

அத்தகு பொருள் உண்டும் இல்லேயும் என்று

நின்றவர்க்கச்சமா ஒத் தொவ்வாமை மொழிந்து’ (33–9–10) என வும்,

  • குண்டமண ராகி யொரு கோலமி குபீலியொடு

குண்டிகை பிடித்து எண்டிசையு மில்லதொரு தெய்வமுளதென்பர்

அது என்ன பொருளாம் (3-80-10) எனவும் வரும் தொடர்களால் ஞானசம்பந்தப் பிள்ளே யார் எடுத்துக்காட்டி மறுத்துள்ளார்.

  • திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளேயவர்கள் எழு திய சம்பந்தரும் சமணரும்’ என்ற நூல் பார்க்க.