பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 689

புத்தம் சமணம் என்ற சமயங்களேத்தோற்றுவித்த முதற் குரவராகிய புத்தர், மகாவீரர் என்ற பெரு மக்கள், அவ்வச்சமயநெறியில் நின்ற மக்கட் சமுதா யத்தாரால் தத்தம் தெய்வமென நாடிப் போற்றப் பெறும் தெய்வ நிலை பெற்றவர்கள் என்பதனையும், தெய்வ நிலேபெற்ற அப்பெருமக்கள், உலகெலாம் இயக்கும் பேரறிவுப் பொருளாகிய முழுமுதற் கடவு ளேயும், அதனுடன் பிரியா இயல்பாகிய திருவருட் பண்பினையும் இகழாது விரும்பிப் போற்றும் தெளிவு நிலே பெற்றவர்கள் என்பதனையும்:

மூடிய சீவரத்தச் முதுகட்டையர் மோட்டமனர் நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய தன்னலத்தான்' [3–59–10]

  • மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்றிவர்கள்

தேடிய தேவர் இம்மால் இறைஞ்சப்படுந் தேவர் பிரான்’ [30–60-10} என வரும் திருப்பாடல்களில் பிள்ளையார் அறிவுறுத்தி யுள்ளார்.

இங்ங்னம் புத்த சமண சமயங்களைத் தோற்று வித்த அச்சமயங்களின் முதற்குரவர்கள். கடவுட் கொள்கைக்கு முரண்படாதவராயினும், அன்னுேர், தம் காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலையைக் கூர்ந்து நோக்கி, அக் காலத்திற்கு இன்றியமையாதனவாகத் தம் மனத்திற்பட்ட அறங்களே மட்டுமே விரித்துக்கூறி வற்புறுத்தும் கடமையினை மேற்கொண்டமையால், பலரும் ஒருவகையால் உடன்பட்டுள்ள தெய்வங் கொள்கையைப்பற்றி எதுவும் கூருது போயினர். அவர் களுக்குப்பின் அச் சமயங்களைப் பரப்பவந்த அவர்தம் மானுக்கர்கள், தம் குரவரால் தனியே வற்புறுத்தப் படாதன. யாவும் அ வ ர். உடம்படாதன எனக் கொண்டு, தெய்வங் கொள்கையினே மறுத்துத் தம்