பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 59 |

புலப்படுத்தி அன்னேரை மெல்ல மெல்லத் தெய்வ முண்டென்னுந் தெளிவு நிலேயில் ஈடுபடுத்தி வாழ்விக் கும் புகழுரைகளாகவே கொள்ளத்தக்கன ஆதலின், புறச்சமயத்தார் கூறும் அப் பழிப்புரைகளைக் கேட்டு அவர்களே வெகுளாதீர்கள் என மக்களுக்கு அறிவுறுத் தும் முறையில்,

போதியாரும் பிண்டி யாரும் புகழல சொன்னுலும்

நீதியாகக் கொண்டங்கருளும் நிழலன்’ [1-60–10] எனவும்,

குண்டருங் குணமிலாத சமண் சாக்கிய

மிண்டர்கள் மீண்டவை கேட்டு வெகுளேன்மின்"

[2-44–40)

‘சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்

மேவாத சொல்லவைகேட்டு வெகுளேன்மின்

[2-11-10] எனவும் திருஞானசம்பந்தர் அருளிய வாய்மொழிகள், தமிழகம் சமயப் பூசல்களில் ஈடுபடாது அமைதியுற்று விளங்க வேண்டுமென்பதில் அவர் மேற்கொண்ட தன் முயற்சிகளே நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளேயார் அருளிய திருப்பதி கங்களில் இயற்கைப் பொருள்களின் எழில் நலங்கள் நன்கு விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

திருக்கற்குடி மலேயின் உயர்ந்த தோற்றத்தையும் அங்கு வாழும் குறிஞ்சிநில மக்களாகிய குறமாதர்கள் கையில் வளரும் இளஞ் சிருர்களின் குழந்தை யுள்ளத் தையும் கண்டு மகிழ்ந்த ஆளுடைய பிள்ளேயார், தாம் கண்ட விளையாட்டுக் காட்சியை,

சங்கமதாச் குறமாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக்

கங்குலின் மாமதிபற்றுங் கற்குடி மாமலேயாரே'

[1-43-2}

என்ற தொடரிற் சுவைபடக் குறித்துள்ளார். குறிஞ்சி நிலத்தே வாழும் யானைகளில் ஆண் யானையாகிய