பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696

பன்னிரு திருமுறை வரலாறு


ஆகியோரையும் திருப்பதிகங்களிற் சிறப்பித்துப் பாடி புள்ளார்.

ஆளுடைய பிள்ளையார் காலத்தில் ஆவணி புரட் டாசி மாதங்களில் உருத்திர கணத் தாராகிய அடியார் களுக்கு அமுதளிக்கும் விழாவும், ஐ ப் ப சி யி ல் திருவோண விழாவும், கார்த்திகையில் விளக்கீடாகிய திருவிழாவும், மார்கழியில் திரு வாதிரைத் திருவிழாவும், ைதத்திங்களிற் பூச விழாவும், மாசியிற் கடலாட்டும், பங்குனியில் உத்திரத் திரு விழாவும், சித்திரையில் அட்டமி விழாவும், வைகாசியிற் பொன்னுரசல் விழாவும், ஆனி ஆடி யிற் பெருஞ்சாந்தி விழாவும் நிகழ்ந்தன என்பது அவர் அருளிய பூம்பாவைப் பதிகத்தால் உணரப்படும்.

இறைவன் உப மணிய முனி வர்க்குப் பாற் கடல் ஈந்தது, குபேரனே த் தோழனுகக் .ெ க | ண் ட து சலந்தரனே ச் சக்கரத்தால் தலேயரிந்தது, அச்சக்கரப் படையைத் திருமாலுக்கு அளித் தது, நஞ்சுண்டு தேவர்களே உய்யக் கொண்டது. திரிபுரம் எரித்தது, தக்கனது வேள்வியை அழித்தது, யானைத்தோலே உரித்துப் போர்த்தது, தாருகாவனத்து முனிவர் மகளிரது நிறையழிய ஒடேந்து செல்வராய்ப் பிச்சை யேற்றது. அயனும் மாலும் அடிமுடி தேட அன்னேர் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் உயர்ந்தது, நான் முகனது கலேயைக் கிள்ளியது, மார்க்கண்டேயர்க் காகக் கூற்றுவனே உதைத்தது, காமனே யெரித்தது முதலிய புராணச் .ெ ச ய் தி க ள் ஞானசம்பந்தர் தேவாரத்திற் பலவிட ங்களிலும் குறிக்கப்பெற்றுள் ளன . புராண வரலாறுகளாகிய இச்செய்திகளிற்பல திருநாவுக்கரசர் தேவாரத்தும் சுந்தரர் தேவாரத்தும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.