பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆளுடைய அரசர் அருளிச் செயல்

மக்களுக்கு உறுதிபயக்கும் நல்லுரைகளே வழங்க வல்ல சொல்வன் மையுடையார் திருநாவுக்கரசர். ஆதலின், 'சொற்குறுதிக்கு அப்பர்' எனப் போற்றப் பெற்ருர். ஆளுடைய அரசர் அருளிய திருப்பதிகங்கள் யாவும், நன் மக்களாற் செய்யத்தகுவன் இவை, தவிரத் தகுவன. இவை எனத் தெளிவாக அறிவுறுத்தும் திறம் வாய்ந்தன. அப்பரடிகள் எண்பத்தோராண்டு கள் இவ்வுலக வாழ்வில் வாழ்ந்தவர். இவ்வுலகில் இளமையும் யாக் கையும், பொருளும் நிலேயுடையன அல்ல ; உலகில் மக்கள் வாழ்வுக்கு உறுதுணையாய் நின்று உயிர்களே உய்விப்பது எல்லாம் வல்ல இறைவ னது திருவருளே நாட்டில் அரசியல் மாறுபாடு களாலும், இயற்கையிலுைம் நேரக்கூடிய பலவகைத் துன்பங்களிலும் தப்பி உயிர்கள் உய் திபெறவேண்டு மால்ை, பற்றற்ருன் பற்றினப் பற்றுதல் வேண்டும் ; அம்மையப்பணுகிய இறைவனது திரு வருள் உண்மை யைத் தெளிந்தவர்கள் எத்தகைய இடையூறு நேர்ந் தாலும் அச்சமின்றி இன் புற்று வாழ்வர் ; என்னும் இவ்வுண்மைகளேத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தும் முறையில் அப்பரடிகள் குமரிமுதல் இமயம் வரை யாத்திரை செய்து, இறைவனது திருவருளாற்றலே மக்கள் உளங்கொள்ளும் படி உழவாரத் திருத்தொண்டு செய்துள்ளார். ஆகவே அவர் அருளிய அருளுரைகள் திருத்தொண்டின் சிறப்பின மக்கள் உளங்கொள விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளன.

செந்தமிழ்நாட்டு வேளாண் குடியில் தோன்றிய மருள் நீக்கியார், தம் இளமைப் பருவத்திலேயே பெற்ருேரை இழந்து, தம்மை ஆதரிப்பார் இல்லாது