பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 70

யின் பெரும்பகுதிக் காலத்தையும் புறச்சமயச் சூழலில் கழித்த தம் அறியாமையினையும், அதுகாறும் உயிர்க் குயிராகிய இறைவனைத் தாம் மறந்திருந்த பெருங் குற்றத்தினேயும் ண்ணியெண் ணி மனம் உருகிய அப்பரடிகள், இவ்வாறு காலத்தைக் கொன்னே கழித்த தம்மையும் பொருளாக ஆட்கொண்டு உய்வித்த சிவபெருமானது பெருங்கருணைத் திறத்தினே உணர்த் தும் முறையில், “பிழைசெய்த இராவணனே உய்வித்த அருளாளன் குற்றமுடைய என்னேயும் கோது நீக்கி ஆட்கொண்டான்” என உலக மக்களுக்கு எடுத்துரைக் கும் முறையில் இராவணனைப் பற்றிய குறிப்பைப் பதிகந்தோறும் விடாது குறித்த ரு ளு கி ன் ருர் . இச்செய்தி,

இத்தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக் கிறையர் கிய

அன்பரும் இந்நெடுநாள் சித்தந்திகழ் தீவினையேன் அடையுந் திருவோ இது என்று

தெருண்டறியா அத்தன்மையஞய இராவணனுக் கருளுங் கருனேத்திற

மானஅதன் மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு

வணங்கினர் மெய்யுறவே. (பெரிய நாவுக்கரசர், 75} எனவரும் திருத்தொண்டர் புராணச் செய்யுளால் இனிது விளங்கும். அப்பரடிகள் அருளிய திருப்பதிகங் களில் இறுதிப்பாடல்கள் யாவும் இராவணனப்பற்றி மேற்குறித்த செய்தியை விளக்கும் நிலையில் இருத்த லால், அப்பாட ல்கள் அவ்வப்பதிகங்களின் பயனுரைக் கும் திருக்கடைக்காப்புப் போன்று அமைந்திருத்தல் காணலாம்.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் தமது வாழ்க்கையைச் சமணர் சூழலில் வீணே கழித்த நிலையை நினைந்து இரங்கும் முறையில் அமைந்த