பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702

பன்னிரு திருமுறை வரலாறு


பதிகங்களும், இ ைற வ ன து திருவருட்பெற்றியை உள்ளவாறுணர்ந்து மகிழும் நிலேயில் அம்மகிழ்ச்சிக்கு இடமளிக்காத சமண ரது பயனற்ற வாழ்க்கையை வெறுத்துக் கூறும் முறையில் அமைந்த பதிகங்களும், தமக்கு அருள்புரிந்த இறைவனே முன்னிலேப்படுத் திக் குறையிாந்து வேண்டும் நிலையில் அமைந்த பதிகங் களும், இறைவனுடைய அருட்குணங்களே மனத்தில் இடைவிடாது எண்ணி, மகிழ்ச்சிமிக்குப் போற்றும் திருப் பதிகங்களும், இறைவன் திருவருளேயடைந்து இன்புறு தற்குரிய நல்வழியை உலகுக்கு அறிவுறுத்தும் முறை யில் அமைந்த பதிகங்களும், தம் மைக் கடலிலிருந்து காப்பாற்றிய திருவைந்தெழுத்தின் சிறப்பினே எடுத் துரைக்கும் பதிகங்களும், உலக மக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக இறைவன் ஊர் தோறும் கோயில் கொண்டெழுந்தருளிய அருளின் நீர்மையை விளக்கும் பதிகங்களும், தம்முடைய குற்றங்களே நீக்கி இறைவனிடத்து எடுத்துக் கூறி, அக்குற்றங்களே நீக்கி ஆட்கொள்ளும்படி வேண்டும் பதிகங்களும், ஐம்பொறி களால் ஈ ர் க் க ப் ப ட் டு அல்லற்படும் த ன து தளர்ச்சியை நீக்கி உய்யக்கொள்ளும்படி இறைவனே வேண்டும் பதிகங்களும், அடியார்க்கு அருள் செய்யும் பொருட்டாக இறைவன் அவ்வப்போது செய்த திருவ ருட் செயல்களை விரித்துரைக்கும் பதிகங்களும், அம்மையப்பனகிய இறைவன் காலந்தோறும் மேற் கொண்ட பல்வேறு திருக்கோலங்களின் பொலிவினைப் புலப்படுத்தும் பதிகங்களும், உலக மக்களே நோக்கி "நீங்கள் இன்ன வாறு இறைவனே வழிபட்டு உய்தி பெறுவீர க’ என அறிவுறுத்தும் பதிகங்களும், யாக்கை பும் இளமையும் செல்வமும் நிலேயாதன எனக் கூறும் பதிகங்களும், இறைவனே அகத்தும் புறத்தும் இன்ன வாறு வழிபடவேண்டும் ன அறிவுறுத்தும் பதிகங் களும், இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இயல்பு