பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பன்னிரு திருமுறை வரலாறு


கல்வெட்டால் அறியப்படுகின்றது. இந்நாளில் கோவி லூர் என்று வழங்கப்பெறும் திருவு சாத்தானம் என்னுந் திருப்பதியிலுள்ள திருக்கைக் கோட்டி ஓதுவார்க்கு இராஜகெம்பீர சோழிய வரையன் என்பான் இறையிலி நிலம் அளித்தனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட் டொன்று கூறுகின்றது. எனவே தேவாரத் திருமுறை கள் வைத்துப் பூசிக்கப்பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக்கோட் டி யென்ற பெயருடன் முற்காலத்தில் வழங்கப்பெற்று வந்தமை இனிது புலம்ை."

மந்திரங்கள் எழுகோடி யாதலின் தேவாரத் திருப் பதிகங்களே ஏழு திருமுறைகளாக வகுத்தனர் என்றும் அந்த மந்திரங்கள் பஞ்சப்பிரமமென்றும் சடங்கமென் றும் சொல்லப்பட்டுப் பதினென் ருகவும் வருதலால் முன்னர்க் கூறிய தேவாரத் திருமுறைகள் ஏழிைேடு திரு வாசகம், திருவிசைப்பா, திருமந்திரம், காரைக்காலம் மையார் முதலிய திருவருட் செல்வர்கள் பாடியருளிய பிரபந்தங்கள் ஆகிய இவற்றையும் முறையே எட்டு மு. த ல் பதினென்று வரையுள்ள திருமுறைகளாகத் தொகுத்தமைத்தார்களென்றும் திருமுறை கண்ட புராணம் கூறும்.

கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவ ராகிய சேக்கிழார் நாயனர் அநபாய சோழ மன்னன் வேண்டுகோளின்படி தில்லேயை யடைந்து அம்பல வாணரை வணங்கி, அப்பெருமான் உ ல .ெ க லா முணர்ந்தோதற் க ரி ய வ ன்’ என அடி யெடுத்துக் கொடுக்கப் பாடிய சிறப்புடையது, திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணமாகும். ஆசிரியர் சேக்கிழார் இவ் வருள் நூலேத் தில்லேயம்பலவன்

2. கல்வெட்டெண் 414 - 1908-ம் ஆண்டு.

g

1. கல்வெட்டெண் 203 - 1908-ஆம் ஆண்டு. 2. இதன் விரிவினைத் தமிழ்ப் பொழில் 16-ஆம் துனரில்

திருவாளர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழு

திய திருக்கைக்கோட்டி என்னும் கட்டுரையிற் காண்க.