பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கன் 707

இறைவனைச் சேராதார் தன்னெறிக்கண் சேராதார். "தீநெறிக்கே சேர்கின்ருர்’ என அறிவுறுத்தும் நிலையில் *திரு நாகேச்சரத்துளான ச் சேர தார் நன்னெறிக்கட் சேராதாரே எனவும், 'திருவீழி மிழலையானைச் சேரா தார் தீநெறிக்கே சேர்கின்றரே எனவும் வரும் திருப் பதிகங்களும், இறைவனைப்பற்றி நின்ருர் எக்காலத்தும் இறவாப் பெருநிலையை அடைந்து இன்புறுவர் என்பது பட, கீழ்வேளுர் ஆளும் கோவைக் கேடிலியை நாடு மவர் கேடிலாரே என அறிவுறுத்தும் திருப்பாடல்களும் என் னிலும் இனியானுகிய இறைவனே இத்துணைக் காலம் வரையிலும் அறியப்பெருது திகைத்திருந்தேன், அவனது திருவருளோடு பழகாது உலகவாழ்வில் பாழே உழன்றேன் என்பதுபட, சேராது திகைத்துநாள் செலுத்தினேனே என்றும், அப்பெருமானேச் ‘சாராதே சாலநாள் போக்கினேனே என்றும் ஏசற்று உரைக்கும் திருப்பதிகங்களும், அவனருளே கண்ணுக அவனைக் கண்டு அடையப் பெற்றேன் என அகமகிழ்ந்து கூறும் நிலையில், திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே' என்றும், "பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே என்றும், கஞ்சனூர் ஆ ண் - கோவைக் கற்பகத்தைக் கண்ணுரக் கண்டுய்ந்தேனே' என்றும், எறும்பியூர் மலே மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே’ என்றும் வரும் பதிகங்களும், தம் நெஞ்சத்தை நோக்கி இடைவிடாது நினைக்கத் தூண்டும் வகையில் திருவாலம் பொழிலானேச் சிந்தி நெஞ்சே ' என்று இவ்வாறு அறிவுறுத்தும் பதிகங்களும், தாம் இறைவனே நினைந்து வினத்தொடர்பறுத்த செய்தியை ஏனையோர்க்கு அறிவுறுத்தும் வகையில் அரநெறியில் அப்பன் தன்னே அடைந்தடியேன் அருவினேநோய் அறுத்தவாறே என்றும் 'ஆவடு தண்டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்