பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 709

தோறும் த வருது பூசனே புரியும் கடப்பாட்டினராக விளங்கிய செய்தி அவரருளிய பதிகங்களிற் பலவிட த் தும் புலகுைம்.

இத்திருப்பதிகங்களேப் பயில்வோர், வாழ்வெனும் மையலே விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித், தாழ் வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்த” நல்லூழ் உடையார் அப்பரடிகள் என்பதனைத் தெளி வாக உணர்வர்.

திருநாவுக்கரசர், செல்வம் நிறைந்த வேளாண் குடியிற் பிறந்து, இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையா என்பதனே யுணர்ந்து, சமணம் முதலிய சமயங் களால் விரித்துரைக்கப் பெறும் நன்னெறிகளே ஒதி யுணர்ந்து, சிவனெனும் நாமந் தனக்கேயுடைய செம்மேனி யம்மாளுகிய முதல்வனுக்கு ஆட்பட்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னுந் தெளிவுடைய சிந்தையராய் நல்லறங்கள் பலவற்றை ஆர்வமுடன் செய்த அறவோராவர். நற்றவச் செல்வராகிய நாவுக் கரசர் அருளிய திருப்பாடல்களில் அறத்தின் ஆக்கமும், எல்ல அறங்களுக்கும் நிலே க்கள மாய் விளங்கும் இறைவனது திருவருட் சார்பும் நன்கு விளக்கப் பெற் றுள்ளன. திருவருட் சார்பினே உலக மக்களனைவரும் நன்கு தெளிந்து திரு நின்ற செம்மையுடையராய் நல்வாழ்வு பெறுதற்குரிய அறவுரைகளே வெளியிட் டருளிய அருளாளர் அப்பரடிகள் ஆதலின், அப்பெருந் த ைகயாரை "அறந்தரு நாவுக்கரசு” எனச் சேக்கிழா ாடிகள் புகழ்ந்து போற்றியுள்ளார்.

நல்லறங்கள் எல்லாவற்றுக்கும் பற்றுக்கோடாக அமைந்தது இறைவனது திருவருளே என்பதனைத் தெளிய உணர்ந்த திருநாவுக்கரசர், தம்மைச் சமண சமயத் திற் புகுத்தி அறவுரைகள் பலவற்றையும்