பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 7 : 3

தொண்ட உழவராகிய திருநாவுக்கரசர், சிவகதி பாகிய நற்பயிர் வி8ளதற்கு உலக மக்கள் மேற்கொள்ள வேண்டிய உழவு முறைகளே,

' மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும்

வித்தை வித்திப் பொய்ம்மையாங் க& யை வாங்கிப் பொறையெனும்

நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெ னும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளே யுமன்றே”

(4-76-2} என வரும் திரு நேரிசையில் உருவக அணிய மைய விரித்துக் கூறிய முறை உணர்ந்து போற்றத் தக்க தாகும்.

அப்பரடிகள் இறைவனேப் பரவும் நிலேயில், அப் பெரும ன் நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எளிமைத் திறத்தையும், அடியார்கள் உள்ளத்திலிருந்து உறுதிப் பொருளே யறிவுறுத்தும் அருள்ஞான ச் சிறப்பினேயும் பல திருப்பாடல்களில் பரவிப் போற்றியுள்ளார்.

' உடம்பெனும் மனேயகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை த தை கழலடி காண லாமே”

(4–75–4) என்ற பாடலால், ஊனிலுயிர்ப்பை யொடுக்கித் தம் உள்ளத்துள்ளே ஞான விளக்கேற்றி இறைவனே க் கானுந் திறத்தை அறிவுறுத்தியுள்ளார்.

  • காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய் மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய தி மைய ஆட்டிப் பூசனை யீசர்ைக்குப் போற்ற விக் காட்டினுேமே”

(4–76–4) னைவரும் திருப்பாடலில் அகப் பூசை செய்யும் முறை யினே அடிகள் புலப்படுத்தினமை காண் க.