பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714

பன்னிரு திருமுறை வரலாறு


  • " கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானேக் கரவார்பால் விரவாடும் பெருமானே விடையேறும் வித்தகனே அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானே என்மனத்தே வைத்தேனே’’ (4–7–1) என வரும் திருப்பதிகத்தில், இறைவனைப் போதொடு நீர் சுமந்தேத்திப் புறத்தே வழிபாடு செய்வோர், வழி பாட்டின் முடிவில் முதல்வனேத் தம் உள்ளத்தே ஒடுக்கிச் சிந்தித்துப் போற்றும் முறையினே அடிகள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை கா ன ல ம் . 'காவாடும் வன்னெஞ்சர்க்கரியானே’ என்னும் முதற் குறிப்புடைய கச்சியேகம்பத் திருப்பதிகத்தினே அடிகள் பாடிய அன்பின் நிலையை,
  • வார்ந்து சொரியுங் கண்ணருவி மயிர்க்கால்தோறும்

வரும்புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பலப்ப அன்புகரைந்தென்

புள்ள லேப்பச் சேர்ந்த நயனப் பயன்பெற்றுத் திாேப்பத் திருவேகம்பன் தமை நேர்ந்த மனத்தின் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்’

(பெரிய - திருநாவுக் - 323) என்ற செய்யுளில் சேக்கிழாசடிகள் சொல்லோவியஞ் செய்து காட்டியுள்ளார். இத்திருப்பாடலைக் கூர்ந்து நோக்குங்கால், திருநாவுக்கரசர் திருவாய் மலர்த் தருளிய திருப்பதிகங்கள் யாவும் அப் பெருந்தகையார் இறைவனே அகத்தும் புறத்தும் இடைவிடாது வழிபடும் திலேயில் அருளிச் செய்யப்பெற்ற பத்திமைப் பாடல்கள் என்பது நன்கு விளங்கும்.

சம ணந்துறந்து சிவநெறியினே மேற்கொண்ட திரு நாவுக்கரசர், தாம் சமணம் புகுவதற்கு முன்னும், புறச் சமயமாகிய அதனைத் துறந்தபின் சிவநெறியினே உறுதி யாகக் கடைப்பிடித்தொழுகும் நிலையிலும் முழுமுகத்