பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 7蟹螺

கடவுளாகிய இறைவனே மறவாது வழிபட்டவராதலின் எல்லாச் சமயத்தாராலும் வழிபடப்பெறும் முதல்வன் ஒருவனே என்னும் உண்மையினேப்பல பதிகங்களிலும் வற்புறுத்தியுள்ளார். சமயவாதங்களில் ஈடுபடாது. சமயாதீதப் பழம்பொருளாகிய முழுமுதற் கடவுளே வழி பட்டுய்தலே மக்களால் மேற்கொள்ள த்தக்க நன் னெறியாம் என்பது,

  • விரிவிலா அறிவினர்கள் வேருெரு சமயஞ் செய்து

எரிவினுற் சொன்குரேனும் எம்பிராற் கேற்றதாகும் பரிவினுற் பெரியோரேத்தும் பெருவேளுர் பற்றினனே மருவினுன் வாழ்த்தியுய்யும் வகையது நினேக்கின்றேனே'

-> (4-60-9) ៩ ៩៦ ថា ,

  • வாதுசெய்து மயங்கும் மனத் தராய் ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் யாதொர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதேவன் னலாற் றேவர்மற் றில்லேயே” (5-100-4) எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளால் உறுதியாக அறிவுறுத்தப் பெற்றுள்ளமை அறிந்து இன் புறத்தகுவ தாகும்.

உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன், உயிர்களின் உள்ளத்தின் உள்ளிருந்து உறுதிப்பொருாே யறிவுறுத் தி நிற்றலால், அம்முதல்வனது இருப்பினே நன்குணர்ந்து இடைவிடாது தியானிப்பவர் உள்ளத்தில், இறை வனது இனிமை நலமாகிய பேரின் பத்தேன் பெருக் கெடுத்துப் பொங்கி நிறையும் என்பதைத் தம் அனுப வத்தில் உணர்ந்து மகிழ்ந்தவர் திருநாவுக்க ரசர். அப்ப சடிகள் இறைவனே மனத்தால் எண்ணிய நிலையில் தாம்பெற்ற பேரின்ப அனுபவத்தினே. மனத்துள் மாயனே மாசறு சோதியை புனிற்றுப் பிள்ளை வெள்ளேம் மதிசூடியை எனக்குத் தாயை எம்மான் இடை மருதனே திணைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ள மே” (5-15-? எனவும்,