பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 பன்னிரு திருமூ ை வான் து

காப்பது முழுமுதற் பொருளாய பரம்பொருளே என்ப தன உணர்ந்து உய்திபெறுவீராக” என அறிவுறுத்து

கி. இது

" தடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே

படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள் தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனேக்கா அண்ணலே ’’

f5–31–6] எனவரும் திருக்குறுந் தொகையாகும்.

தெய்வமுண்டென்னுந் தெளிவில்லாத சமணர் களோடு .ெ ந ரு ங் கி ப் பழகிய திருநாவுக்கரசர், கடவுளுண்டென்னுந் துணியின்றி அவர்களுடன் கூடித் தாம் மேற்கொண்ட கொல்லாமை, புலா லுண்ணுமை முதலிய புறச்செயல்களாலும் உடம்பை வருத்தும் பல்வேறு விரதங்களாலும் இவ்வுலக வாழ்வாகிய இம்மையின்பத்தையும், அவ்வுலக வாழ் வாகிய மறுமையின்பத்தையும் ஒருங்கேயிழந்து வருந் திய அவலநிலையினே,

  • ஒரு பிறப்பி லாண்டியை யுணர்ந்துங் காணுர்

உயர்கதிக்கு வழிதேடிப் போகமாட்டார் வருபிறப்பொன் றுணராது மாசுபூசி

வழிகாணுதவர் போல்வார் மனத்தளுகி அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகையூரன்

அம்மான்றன் அடியிணையே அனந்துவாழாது இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு

ஏழையேனுன் பண்டு இகழ்ந்தவாறே (6-3-5) என வரும் ஏழைத்திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டு இரங்குகின்ருர். இங்ங்ணம் உலகமக்கள் இம்மை மறுமை யென்னும் இருமை யின்பங்களையும் இழக்கும் நிலையில் சமணர், புத்தர் ஆகிய புறச்சமயத்தார் தம் சமயக் கொள்கைகளைப் பரப்பிய செய்தியை,