பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 719

  • சாக்கியப்பட்டுஞ் சமனுருவாகி யுடையொழிந்தும்

பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றுவிட்டார் ”

է 1-116-101 என வரும் தொடரில் ஞான சம்பந்தர் வெளியிட் டுள்ளமை இங்கு ஒப்புநோக்கி உணரத் தக்கதாகும்.

சொல்வேந்தராகிய அப்பர் அருளிய திருப்பதிகப் பாடல்களில், பொருள் விளக்கத்திற்கு வேண்டிய உவமை, உருவகம் முதலிய அணிநலங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. ஐம்பொறிகளும் உயிரைச் சூழ்ந்து நின்று தத்தம் பொருள்கள் மேற்செலுத்த, அவற்ருல் ஈர்க்கப்பட்டு அலேயும் உயிரானது, பின் அப்பொறி களால் தனக்கு நேரவிருக்கும் அழிவினைச் சிந்திக்க நேரமின்றி ஐம்பொறி யின் பத்திலேயே அழுந்திக் கிடக்கும் மயக்க நிலையை விளக்கக் கருதிய நாவுக் கரசர், உணவு சமைத் தற்கென அடுப்பிலேற்றிய உலேப்பானே நீரில் இடப்பெற்ற ஆமையானது, நீர் சிறிது சூடேறி இள வெந்நீராகிய நிலையில் அதிற் குதித்து மகிழ்ந்து ஆடும் தெளிவற்ற நிலையினை உவமையாக எடுத்தாண்டுள்ளார்,

' வளைத்து நின்றைவர் கள்வர் வந்தெனே நடுக்கஞ்

செய்யத் தளேத்துவைத் துலேயை யேற்றித் தழலெரிமடுத்த நீரில் திகரத்துநின் ருடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் இளேத்துநின் ருடுகின்றேன் என்செய்வான்

தோன்றினேனே ” {4–79–107

என்ற பாடலில், ஆன்மா ஐம்பொறிகளால் ஈர்க்கப் பட்டுப் பின் விளைவறியாது சிறிது பொழுதுமகிழும் அவலநிலைக்கு, உலேயேற்றிய இளவெந்நீரிற் குதித் தாடும் ஆமையின் தெளிவற்ற மகிழ்ச்சியினை உவமை யாகக் குறித்த நயம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.