பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 72?

என்பிற்ைகழி நிரைத் திறைச்சிமண் சுவரெறிந்

திது நம்மில்லம் புன்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையால்

முகடுகொண்டு முன் பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின்

மூழ்கிடாதே

அன்பருைர் தொழு துய்யலாம் மையல் கொண்

டஞ்சல் நெஞ்சே (2-79-8)

என யாக்கையின் இழிபினேயும் அதன் நிலையாமை விஜனயும் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தியுள்ள” காண்க.

அப்பர்சுவாமிகள் இறைவனே நோக்கி உரை யாடும் நிலையிற் பாடிய பாடல்கள் படிக்குந்தோறும் சுவை விளப்பனவாகும். திருவொற்றியூர்க்குச் சென்று அங்குக்கோயில் கொண்டருளிய இறைவனே வணங்கி மகிழ்ந்த திருநாவுக்கரசர், எழுத்தறியும் பெருமாளுகிய இறைவனே நோக்கி, "வே த ங் க ளே அருளிய முதல்வனே, நீ கோயில் கொண்டருளிய இத்திருப்பதி யினே நீ பிறரிடம் ஒற்றியாகப் பெற்றுள்ளாய். நின்பால் ஒற்றிவைத்த அவர்கள் வழியில் ஒருவரும் இப்பொழுது இல்லாத நிலையில் ஒற்றியூராகிய இவ்வூர் நினக்குச் சொந்தமான ஊராய்விட்டது. ஆயினும் நின் பால் ஒற்றி வைத்தாருக்கு உறவானவர் யாரேனும் வந்து கேட்க நேர்ந்தால் இதனைத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டுமே என்ற எண்ணத்தால் இவ்வூரை நீ விற்று விட முயலுதலும் கூடும். அவ்வாறு இவ்வூரை 戲 விலக்கு விற்றுவிட நினைத்தால், நீ இதற்கு என்ன விலை சொன்னலும் கொடுத்து வாங்கிக்கொள்ளுதற்குப் பலரும் முன்வருவார்கள். அவ்வாறு அவர்கள் முன் வருதற்குக் காரணம், வண்டுகள் நறுமலர்களேச் சுற்றி யாழோசையினே யெழுப்பித் தேனுண்ணுதற்கு இட மாகிய சோலேயும் இளமரக்காவும் சூழ்ந்து நெருங்கி