பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பன்னிரு திருமுறை வரலாறு


கருதுகின் ருர்கள். பன்னிரு திருமுறை ஆசிரியர்களுள் காலத்தாற் பிற்பட்டவர் அருண்மொழித் தேவராகிய சேக் கிழாராவர். அவர் வாழ்ந்தகாலம் கி. பி. பன்னி ரண்டாம் நூற்ருண்டென்பது பலரும் அறிந்ததே. எனவே கி. பி. ஐந்தாம் நூற்ருண்டு முதல் பன்னிரண் டாம் நூற்ருண்டு முடிய அமைந்த காலப்பகுதியே சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோன்றி வளர்ந்த காலமாகும். இத் திருமுறைகள் பன்னிரண் டையும் அருளிச்செய்த ஆசிரியப் பெருமக்கள் திரு மூலர் முதல் சேக்கிழார் ஈருக வுள்ள இருபத்தெழுவ ராவர். இப் பெருமக்களாற் பாடப்பெற்றனவாக இப் பொழுது நமக்குக் கிடைத்துள்ள பன்னிரு திருமுறை களிலும் ஏறக்குறையப் பதினெண்ணுயிரம் திருப் பாடல்கள் காணப்படுகின்றன.

இங்குக்குறித்த திருமுறைகள் பன்னிரண்டும் இவற்றை இயற்றியுதவிய ஆசிரியப் பெருமக்களது சிவஞான நிறைவின் வெளிப்பாடுகளே யாகும். திருக் கோயிலுள் இருக்கும் திருமேனிகளிலும் அடியார் திரு வேடங்களிலும் ஆசிரியன் திருமேனியிலும் இறை வன் வெளிப்பட்டு அருள்புரிவாகுதலின் மேற்குறித்த இடங்களில் சிவனேக்கண்டு வழிபடுக எனச் சைவ நூல் கள் விதிக்கின்றன. அம்முறையில் அவனே தானே யாகிய நெறியில் இறை பணிபுரிந்த மெய்யடியார்கள் திருவாய்மலர்ந்தருளிய செழும் பாடல்களிலும் இறை வனது திருவருள் வெளிப்பட்டுத் தோன்றுதல் இயல் பாதலின், அவ்வருள் நூலேயும் இறைவன் வாய்மொழி யாகத் தெளிந்து வழிபடுதல் வேண்டுமென்பது ஆன் ருேர் துணிபு. இறைவனல் தடுத்தாட் கொள்ளப் பெற்ற சிறப்புடைய நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமக்கு முன்தோன்றிச் சிவத்தொண்டு புரிந்த நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரை யரும் பாடியருளிய நற்றமிழ் மாலையைப் பாடி இறை வனே வழிபட்ட செய்தியும் அவருடைய தோழராகிய

1. ஏயர்கோன் கலிக்காம நாயனர் புராணம் 44-ம் செய்யுள்