பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724

பன்னிரு திருமுறை வரலாறு


எவரேனுந் தாமாக விலாடத்திட்ட

திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள் கி

உவராதே பவரவரைக் கண்டபோது

உகந்தடிமைத் திறநினேந்தங் குவந்து நோக்கி

இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமேபேணிக்

கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்ருப்பூர் தடுதறியைக் காணல: மே (6.61-3)

எ ன வ ரு ம் திருத்தாண்டகம், சிவனடியார்களேச் சிவனெனவே தெளிந்து வழிபடுத்திறத்தினே அறிவுறுத் தல் காணலாம்.

சிவனடியார்களேக்க ண் டால் அவர் பால் அன்பும் அச்சமும் கொண்டு அவர்களைப் பணிந்து அகலுதல் வேண்டுமென இயமன் துTதர்களுக்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, கால பாசத் திருக்குறுந்தொகை யாகும்.

கடவுளே வழிபடு தற்கு அன்பு, கொல்லாமை, பொறியடக்கம், வாய்மை, பொறை, அருள், அறிவு, தவம் என்னும் எண் வகை மலர்கள் இன்றியமை யாதன என்பதனே,

  • எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்டலரிடு வார் வினை மாயுமால் கட்டித்தேன் கலந்தன்ன கெடிலவி ரட்டரை டி சேரு மவருக்கே ’ [5–54–1}

எனவரும் திருப்பதிகத்தில் அடிகள் குறித்துள்ளார்.

தம்மை இடர் நீக்கி உய்வித்த திருவைந்தெழுத் தின் சிறப்பினே அப்பரடிகள் பல திருப்பாடல்களிலும் வெளிப்படையாக விரித்துக் கூறியிருத்தலேக் கூர்ந்து நோக்குங்கால், அருந்தவம் தரும் அஞ்செழுத்தினே