பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 79.5

ஒதி, உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி யின்புறுதல் வேண்டும் என்னும் பெருவேட்கையுடையவர் அப்ப ரடிகள் என்பது நன்கு புலனும், திருநாவுக்கரசர் தாம் பெற்ற ஐந்தெழுத்துபதேசத்தை,

கருவாய்க் கிடந்துன் கழலே நினேயுங் கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்துன்நன் நாமம் பயின்றேன்

உணதருளால்

திருவாய்ப் பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீபாதிரிப்புலியூர் அரனே

[4-94–6] எனவும்,

நமச்சிவாயவே ஞான முங்கல்வியும் நமச்சிவாயவே நானறிவிச்சையும் நமச்சிவாயவே நா நவின்றேத்துமே நமச்சிவாயவே நன்னெறிகாட்டுமே ? £5.90.2]

எனவும் வரும் திருப்பாடல்களில் நுண் மையும் தெளி வும் பொருந்த வெளியிட்டருளியதிறம் நினைந்து போற்றற் பாலதாகும். ஆலமர் செல்வகிைய கடவுள், முனிவர் நால்வர்க்கு அறமுதலிய நாற்பொருளையும் உபதேசிக்க எழுந்தருளிய நிலேயில், அப்பெருமான் சின்முத்திரையாகக் காட்டிய திருக்கரத்தில் அமைந் துள்ள ஐந்து விரல்களும் திருவைந்தெழுத்தின் பொருளைவிளக்கும் நிலையில் அமைந்தனவே என்பதும், இத்திருவைந்தெழுத்தினே ஒதுதலால் காமம் முதலிய குற்றத்தைப் போக்குதலும், பாம்பின் நஞ்சு முதலிய வற்ருல் நேரும் துன்பங்களே நீக்குதலும் கைகூடும் என்பதும் ஆகிய உண்மையினே,

கொங்கலர் வன்மதன் வாளியைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் தங்கரவின் படம்அஞ்சும், தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே [3-22-5;