பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730

பன்னிரு திருமுறை வரலாறு


பெற்றவை ; கொப்பளித்த திருநேரிசை, நினேந்த திரு நேரிசை, ஆருயிர்த் திரு விருத்தம் : சரக்கறைத் திரு விருத்தம், பசுபதி திருவிருத்தம், நின்ற திருத்தாண் டகம், திருவடித் திருத்தாண்டகம், புக்க திருத்தாண் டகம், காப்புத் திருத்தாண்டகம், ஏழைத் திருத்தாண் டகம், போற்றித் திருத்தாண்டகம் என்பனவாம். முதற் குறிப்பாற் பெயர்பெற்றது, சிவனெனுமோசை' என்ற பதிகம். ஈற்றுத் தொடராற் பெயர்பெற்றது ப வ ந | ச த் திருப்பதிகம். பொருட்டொகையாற் பெயர்பெற்றவை : மனத்தொகைத் தி ரு க் கு று ந் தொகை, சித்தத் தொகைத் திருக்குறுந்தொகை, உள்ளத்தொகைத் திருக்குறுந்தொகை, க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம் என்ற பதிகங்களாகும். பாடல்களிற் பயின்ற ஈற்றுச் சொல்லாற் பெயர் இபற்றவை . மறக்கிற்பனே யென்னுந் திருக்குறுந் தொகை, தொழிற்பாலதே யென்னுந் திருக்குறுந் தொகை என்பனவாகும். பொது வகையாற் பெயர் பெற்ற பதிகங்கள் தனித் திருநேரிசை, தனித் திருக் குறுந்தொகை, தனித்திருத்தாண்டகம் பலவகைத் திருத்தாடகம் என வரும் திருப்பதிகங்களாகும்.