பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732

பன்னிரு திருமுறை வரலாறு


வையும் ஒருங்குடையனவாய், அவ்விருவர் திருப்பதி கங்களுக்கும் அமைந்த விளக்கவுரையாகவும் கருத் துரையாகவும் திகழ்தலேக் காணலாம்.

நம்பியாரூரர் அருளிய திருப்பதிகயாப்புக்களிற் பெ ரும்பாலன முன்னேயிருவர் அருளிய திருப்பதிகங்களை அடியொற்றி அமைந்தவை இயலமைதி என்ற பகுதி யில் விளக்கப்பெற்றது. நாவலு ரர் இறைவரால் தடுத் தாட் கொள்ளப் பெற்றுத் தம்பிரான் தோழராக விளங் கியவராதலின், அவர் பாடிய திருப்பதிகங்களிற் பெரும்பாலன, எல்லாம் வல்ல இறைவனத் தம் உயிர்த்தோழகை எண்ணி அப்பெருமானுடன் அன் பில் நயந்து விளையாடியும், வன் கண் மையுடன் ஊடி பிடித்துக் கூறியும், தமக்கு இன்றியமையாத அனைத் தையும் அப்பெருமான்பால் வ்ேண்டிப் பெறும் உரிமை புணர்வைப் புலப்படுத்துவனவாக உள்ளன. நலியேன் ஒருவரை நான் உமையல்லால் நாட்டியத்தான்குடி நம்பி !’ என நம்பியாரூரர் தம் உள்ளக் கருத்தாக இறைவனிடம் வெளியிட்டுக் கூறும் இத்தொடர், வலியற்ற நிலையில் விளங்கும் உலக மக்கள்பால் தமக்கு வேண்டிய பொன் பொருள் முதலியவற்றை வேண்டி அல்லற்படும் நிலையை விட்டு, எவ்வுயிர்க்கும் உயிராக விளங்கும் இறைவன் ஒருவனேயே நலிந்து வேண்டிப் பெற முயலும் ஆளுராது தோழமைத் திறத்தை நன்கு விளக்குவதாகும்.

சுந்தரர் பாடிய பதிகங்களில் தக்கேசிப்பண் னமைந்த திருப்பதிகங்கள் படிப்போருடைய உள் ளத்தை நெகிழ்விக்கும் தனிச் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன. திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங் களில் திருத்தாண்ட கயாப்பு அவர்க்கே உரியமுறையில் சிறந்து விளங்குவதைப்போன்று, சுந்தரர் பதிகங்களில் தக்கேசிப்பண்ணமைந்த பதிகங்கள் ஆரூரர்க்கேயுரிய சொல் நடையில் அமைந்துள்ளன.