பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746

பன்னிரு திருமுறை வரலாறு


27. காண்டற் கரிய கடவுள் கண்டாய்” (6-23-1) என்ருர் நாவுக்கரசர்.

கொண்டவன் காண்டவன் காண்டற்கரிய கடவுளாய் (7-45-6) என்பது சுந்தரர் தேவாரம்.

28. துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ" (5.10.3) என அழைத்தார் அப்பரடிகள்.

"சுந்தரராய்த் து மதியம் சூடுவது சுவண் டே” (7-46-4) என வினவினர் சுந்தரர். ‘சு வண்டு’ என்பது உபாயம், பொருத்தம் என்ற பொருளில் வழங்கும் சொல்லாகும்.

29. கறிவிரவு நெய்சோறு கையிலுண்டு என்பது அப்பர்வாக்கு.

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்’ (7-46-10) என்பது சுந்தரர் வேண்டுகோள்.

30. வரையார் மடமங்கை பங்கா, கங்கை மன வாளா (6.47-8) என அழைத்தார் அப்பர்.

வேண்டார் குழலி உமை நங்கை பங்கா - கங்கை மணவாளா (7-82-7) என அழைத்தார் சுந்தரர்.

31, ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென்' என்பது அப்பர் வாக்கு.

"ஓங்கு மாகடல் ஒதம் வந்துலவும் ஒற்றியூர்” (7.54-3) என்பது சுந்தரர் வாக்கு.

32. எண் கணமும் பின் படர” (4-19-4) என் ருர் அப்பர்.

எண் கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங் கோயிலுளான்' (7-62-8) என் ருர் சுந்தரர்.